www.garudabazaar.com

பழைய யுவன் வந்தாச்சு.. U1 குரலில் வெளியான 'Love Today' படத்தின் முதல் சிங்கிள் பாடல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'லவ் டுடே' படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி உள்ளது.

Saachitaale song composed and sung by yuvan shankar raja

Also Read | மொகாலய உடையில் சமந்தா.. பிரபல போட்டோகிராபர் வெளியிட்ட தாறுமாறான போட்டோஸ்!

கடந்த 2019-ம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான படம் ‘கோமாளி'. இப்படத்தை இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி இருந்தார். காஜல் அகர்வால், யோகிபாபு, சம்யுக்தா, கே. எஸ் ரவிக்குமார், பொன்னம்பலம் என பலர் நடித்து இருந்தனர்.

ஐசரி கணேஷ் தயாரித்த இந்த படத்துக்கு ஹிப்பாப் தமிழா ஆதி இசையமைத்திருந்தார். காமெடி டிராமாவாக உருவான இந்த படத்தை விமர்சகர்களும், ரசிகர்களும் பாராட்டினர். வசூல் ரீதியாகவும் கோமாளி படம் வெற்றியடைந்தது.

கோமாளி படத்தை தொடர்ந்து இயக்குனர் பிரதீப், லவ் டுடே படத்தை இயக்கி ஹீரோவாக நடித்துள்ளார்.

Saachitaale song composed and sung by yuvan shankar raja

  லவ் டுடே படத்தை AGS நிறுவனம் தயாரிக்கிறது. பிரதீப் ரங்கநாதன் இந்த படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.நடிகர் சத்யராஜ், ராதிகா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.

இந்நிலையில் இந்த படத்தின் முதல் சிங்கிள்  பாடலான 'சாச்சிட்டாலே' பாடலின்  Lyrical வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

இயக்குனர் பிரதீப் மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இந்த வீடியோவில் தோன்றியுள்ளனர். மேலும் சில மான்டேஜ் காட்சிகளும் வீடியோவில் இடம்பெற்றுள்ளன.

Saachitaale song composed and sung by yuvan shankar raja

"பழைய யுவன் வேணும்" என்று பிரதீப் கேட்க, உடனே தனது பழைய சிறு வயது போட்டோவை யுவன் கொடுப்பது போன்ற ப்ரோமோ காட்சிகளும் இந்த வீடியோவின் முதல் இரண்டு நிமிடங்களில் இடம்பெற்றுள்ளன. இந்த பாடலை பிரதீப் எழுதி யுவன் சங்கர் ராஜா பாடியுள்ளார்.

Also Read | LIGER படத்தின் ப்ரோமோஷன்ல அனன்யா பாண்டே அணிந்த ட்ரெஸ் விலை மட்டும் இம்புட்டா? அம்மாடியோவ்

பழைய யுவன் வந்தாச்சு.. U1 குரலில் வெளியான 'LOVE TODAY' படத்தின் முதல் சிங்கிள் பாடல்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Saachitaale song composed and sung by yuvan shankar raja

People looking for online information on Saachitaale song, Yuvan Shankar Raja, Yuvan Shankar Raja Saachitaale song will find this news story useful.