www.garudabazaar.com

வலிமை ரிலீஸ் ஆகும் அதே நாளில்.. போனி கபூர் கொடுக்கப்போகும் ஸ்பெஷல் சர்ப்ரைஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: போனிகபூர் தயாரிப்பில் RJ பாலாஜி நடிக்கும் புதிய படத்தின்  தகவல் வெளியாகி உள்ளது.

RJ Balaji veetla visheshanga movie First look releasing on VALIMAI day

VIDEO: வலிமை வில்லன் கார்த்திக்கேயாவுக்கு நடிகர் அஜித் கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட்! EXCLUSIVE

ரேடியோ ஜாக்கியாக இருந்து சினிமா துறைக்கு வந்தவர்களில் முக்கியமானவர் நடிகர் ஆர் ஜே பாலாஜி.  ரேடியோவில் சினிமா விமர்சனங்கள் மூலம் இவருக்கு பல ரசிகர்கள் கிடைத்தனர். சினிமாவுக்கு செலவளிக்கும் 120 ரூபாயை மையமாக வைத்தே இவருடைய சினிமா விமர்சனங்கள் புகழ் பெற்றன.

பின் காமெடியனாக நானும் ரவுடி தான், காற்று வெளியிடை, வடகறி போன்ற படங்களில் நடித்தார். இவர் முக்கிய வேடத்தில் ஹீரோவாக நடித்த LKG மற்றும் மூக்குத்தி அம்மன் திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. தற்போது இவர் போனி கபூர் தயாரிப்பில் இந்தி திரைப்படமான பதாய் கோ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

RJ Balaji veetla visheshanga movie First look releasing on VALIMAI day

இந்த படத்தில் நடிப்பது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தை இயக்கவும் செய்கிறார். இந்த பதாய் கோ திரைப்படம் இந்தியில் 220 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்த திரைப்படமாகும், தேசியவிருதையும் இந்தப்படம் வென்றது குறிப்பிடத்தக்கது.

இந்த ரீமேக் படத்தில் இவருக்கு ஜோடியாக சூரரைப்போற்று படத்தில் நடித்த அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். சத்யராஜ், ஊர்வசி, யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நடிகர் யோகி பாபு ஆர். ஜே பாலாஜியுடன் கௌரவத்தோற்றத்தில் நடிக்கிறார். இந்த ரீமேக் படத்திற்கு 'வீட்ல விசேஷங்க' என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கோயமுத்தூரில் நடைபெற்ற இந்த படத்தின் படபிடிப்பு ஒரே கட்டமாக 40 நாட்கள் நடந்து முடிந்தது, இந்த 2022 ஆம் ஆண்டு  இந்த படம் திரைக்கு வருவதாக ஆர் ஜே பாலாஜி ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். போனிகபூர் தயாரிப்பில் இந்த வருடம் தமிழில் வலிமை, நெஞ்சுக்கு நீதி ஆகிய படங்கள் வெளி வர இருக்கின்றன.

RJ Balaji veetla visheshanga movie First look releasing on VALIMAI day

இந்நிலையில் இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் வரும் பிப்ரவரி 24 அன்று மிகப் பிரம்மாண்டமாக  வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக பெரிய அளவில் விளம்பரங்கள் செய்ய தயாரிப்பாளார் போனிகபூர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பிப்ரவரி 24 அன்று போனிகபூர் தயாரிப்பில் அஜித்குமார் நடிப்பில் வலிமை படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

AK61 படத்துல இது தான் அஜித் கெட்டப்! FIRST LOOK உடன் படக்குழு வெளியிட்ட முதல் அப்டேட்

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

RJ Balaji veetla visheshanga movie First look releasing on VALIMAI day

People looking for online information on போனிகபூர், வலிமை ரிலீஸ், RJ பாலாஜி, RJ Balaji, VALIMAI day, Veetla visheshanga movie will find this news story useful.