www.garudabazaar.com

போனிகபூர் தயாரிப்பில் R J பாலாஜி - அபர்ணா நடிக்கும் இந்தி ரீமேக் படத்தின் SEMA ரிலீஸ் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ரேடியோ ஜாக்கியாக இருந்து சினிமா துறைக்கு வந்தவர்களில் முக்கியமானவர் நடிகர் ஆர் ஜே பாலாஜி.

rj balaji boney kapoor new movie rjb3 release update

இவர் முக்கிய வேடத்தில் நடித்த LKG மற்றும் மூக்குத்தி அம்மன் திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. தற்போது இவர் போனி கபூர் தயாரிப்பில் இந்தி திரைப்படமான பதாய் கோ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

rj balaji boney kapoor new movie rjb3 release update

இந்த படத்தில் நடிப்பது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தை இயக்கவும் செய்கிறார். இந்த ரீமேக் படத்தில் இவருக்கு ஜோடியாக சூரரைப்போற்று படத்தில் நடித்த அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். சத்யராஜ், ஊர்வசி, யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

rj balaji boney kapoor new movie rjb3 release update

இந்த பதாய் கோ திரைப்படம் இந்தியில் 220 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்த திரைப்படமாகும், தேசியவிருதையும் இந்தப்படம் வென்றது குறிப்பிடத்தக்கது. இந்த ரீமேக் படத்திற்கு 'வீட்ல விசேஷங்க' என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

rj balaji boney kapoor new movie rjb3 release update

இந்நிலையில் கோயமுத்தூரில் நடைபெற்ற இந்த படத்தின் படபிடிப்பு ஒரே கட்டமாக 40 நாட்கள் நடந்து முடிந்துள்ளதாகவும், 2022 ஆம் ஆண்டு முதல் காலாண்டில் இந்த படம் திரைக்கு வருவதாகவும் ஆர் ஜே பாலாஜி தனது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

rj balaji boney kapoor new movie rjb3 release update

People looking for online information on Boney kapoor, RJ Balaji will find this news story useful.