www.garudabazaar.com

ஆர்யா நடிக்கும் புதிய படத்தின் தியேட்டர் உரிமையை கைப்பற்றிய உதயநிதி ஸ்டாலின்! எப்போ ரிலீஸ்?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில், ஆர்யா நடிக்கும் திரைப்படம் ‘அரண்மனை-3’

Red Giant Movies Bagged the rights of arya movie

இவர் இயக்கிய அரண்மனை (Aranmanai) மற்றும் அரண்மனை-2  படத்தின் முதல் இரண்டு பாகங்கள் மிகப்பெரும் வெற்றியை பெற்ற நிலையில், தற்போது இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில், ஆர்யா (Arya) நடிக்க, அரண்மனை-3 படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு, கடந்த ஆண்டே முழுமையாக முடிக்கப்பட்டுவிட்டது.

Red Giant Movies Bagged the rights of arya movie

இந்நிலையில் இந்தப்படம் அக்டோபர் மாதம் 14 ஆம் நாள் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இன்று படத்தின் வெளியீட்டு தேதி அடங்கிய போஸ்டரை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை (Theatrical Rights) உதயநிதி ஸ்டாலின் கைப்பற்றி உள்ளார். இதனை படக்குழு அதிகரப்பூர்வமாக புதிய போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது.

Red Giant Movies Bagged the rights of arya movie

ஆர்யா, ராஷிக்கண்ணா, சுந்தர்.சி உள்ளிட்டோர் முதன்மை பாத்திரங்களில் நடிக்க, விவேக், யோகி பாபு, சாக்‌ஷி அகர்வால், சம்பத், மனோபாலா, வின்சென்ட் அசோகன், மதுசூதன ராவ், வேல ராமமூர்த்தி, நளினி, விச்சு விஸ்வநாத் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Red Giant Movies Bagged the rights of arya movie

முதல் முறையாக இயக்குநர் சுந்தர்.சி உடன் பிரபல சண்டைப்பயிற்சி இயக்குநர் பீட்டர் ஹெய்ன் இப்படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளார். இந்த படத்தின் ஒளிப்பதிவை UK செந்தில்குமார் செய்துள்ளார். படத்தொகுப்பை ஃபென்னி ஆலிவர் கவனிக்கிறார். ஆவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் சார்பில் குஷ்பு இப்படத்தினை தயாரித்துள்ளார்.  C.சத்யா இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Red Giant Movies Bagged the rights of arya movie

People looking for online information on Arya, Sundar C, Udhayanidhi Stalin will find this news story useful.