www.garudabazaar.com

போடு! அஜித்தின் துணிவு-ஐ தொடர்ந்து விஜய்யின் வாரிசு-ஐ விநியோகிக்கும் ரெட் ஜெயன்ட்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயண்ட் நிறுவனம் தமிழகத்தில் துணிவு படத்தை வெளியிட இருக்கிறது. இந்நிலையில், தமிழகத்தின் முக்கிய நகரங்களில் வாரிசு படத்தை வெளியிடும் உரிமையையும் அந்நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது.

Red Giant Going to Distributes Varisu and Thunivu in Tamilnadu

வலிமைக்கு பின் நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படத்திற்கு துணிவு என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் இரண்டு போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இந்த படத்தை H. வினோத் இயக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கென் இந்த  படத்திலும் நடித்து வருகிறார். பிரபல இளம் தமிழ் சினிமா நடிகர் வீராவும் இந்த படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். மேலும் பிக்பாஸ் பிரபலங்களான பவனி & அமீர் இருவரும் நடிக்கின்றனர்.

Red Giant Going to Distributes Varisu and Thunivu in Tamilnadu

இந்த படம் வரும் 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

அதேபோல, தளபதி விஜய்யின் நடிப்பில் வெளிவரும்  'வாரிசு' படமும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தை வம்சி பைடிபள்ளி இயக்கி வருகிறார். வாரிசு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை பிரபல தயாரிப்பாளர் லலித் தனது 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் மூலம் கைப்பற்றியுள்ளார். லலித், ஏற்கனவே விஜய் & விஜய் சேதுபதி நடித்த மாஸ்டர் படத்தை தயாரித்தவர். விஜய் - லோகேஷ் கனகராஜ் இணையும் புதிய படத்தினை தயாரிக்க இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Red Giant Going to Distributes Varisu and Thunivu in Tamilnadu

இதனிடையே, உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயண்ட் நிறுவனம் வாரிசு படத்தின் சென்னை சிட்டி, செங்கல்பட்டு, கோயம்புத்தூர், வட & தென் ஆற்காடு ஆகிய ஏரியாக்களின் விநியோகஸ்த உரிமையை பெற்றிருக்கிறது. இதன்மூலம், பொங்கலுக்கு வரவிருக்கும் துணிவு மற்றும் வாரிசு ஆகிய இரண்டு படங்களையும் ரெட்ஜெயண்ட் நிறுவனம் தமிழகத்தில் வெளியிட இருப்பது உறுதியாகியுள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Red Giant Going to Distributes Varisu and Thunivu in Tamilnadu

People looking for online information on Ajith, Red giant, Thunivu, Varisu, Vijay will find this news story useful.