www.garudabazaar.com

எப்படியோ ஒரு 'லவ் டிராக்'க ஒடைச்சி விட்டுட்டீங்க?... சுரேஷ்க்கு பெருகும் ஆதரவு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேற்று பிக்பாஸ் வீட்டில் சுச்சி கொளுத்தி போட்ட பட்டாசுகள் நன்றாகவே வெடித்தன. அவர் அளித்த எமோஜி மீனிங் புரியவில்லை என ரியோ, அனிதா சந்தேகம் கேட்டனர். பின்னர் தனித்தனியாக சுரேஷ், அர்ச்சனா, பாலா ஆகியோரிடம் சுச்சி பேசினார். பாலாவிடம் பேசும்போது உங்களுக்கும்-ஷிவானிக்கும் நடுவுல நடக்குற விஷயம் (eye candy என்ற வார்த்தையை உபயோகித்தார்) பார்க்க நல்லா இருக்கு என சொன்னார்.

Really Suchitra Asked this for Suresh Chakravarthy?

இதைக்கேட்ட பாலா நான் மத்தவங்க எமோஷன்ஸ் கூட விளையாட மாட்டேன் என சொன்னார். பின்னர் பாலா-சுரேஷ் இடையில் ஒரு சண்டை எழுந்தது. இதையடுத்து ஷிவானியை ஜடமா நீ? என திட்டிய சுரேஷ் இந்த லவ் டிராக்குக்கு நான் சப்போர்ட் பண்ண மாட்டேன்னு சொல்லிட்டேன் என்றார். தக்காளி விஷயத்தில் சுச்சி சத்தமாக பேசியது அவருக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. இதுகுறித்து கேப்டன் சம்யுக்தாவிடமும் அவர் விளக்கி இருந்தார்.

ஆனால் திடீரென அவர் பாலா-ஷிவானி விஷயத்தை ஏன் இழுத்தார்? என்பது தெரியவில்லை. இதைப்பார்த்த ரசிகர்கள் எது எப்படியோ ஒரு லவ் டிராக்க போற போக்குல ஒடைச்சு விட்டுட்டீங்க? என சுரேஷை கலாய்த்து வருகின்றனர். அப்போ இந்த சீசன்ல லவ் டிராக் இல்லையா பாஸ்? என கேள்வி எழுப்பி வருகின்றனர். 

தொடர்புடைய இணைப்புகள்

Really Suchitra Asked this for Suresh Chakravarthy?

People looking for online information on Suresh Chakravarthy will find this news story useful.