Battery
The Legend
Maha others
www.garudabazaar.com

பிரபல டாப் போட்டோகிராபர் கூட BLACK & WHITE போட்டோ ஷூட்.. ராஷ்மிகா மந்தனாவின் வைரல் ஃபோட்டோஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Rashmika Mandanna Latest Photoshoot with Avinash Gowariker

Also Read | துல்கர் நடிக்கும் 'சீதா ராமம்'.. தமிழக ரிலீஸ் உரிமத்தை கைப்பற்றிய பிரபல தயாரிப்பாளர்!

நடிகை ராஷ்மிகா மந்தனா 2016 ஆம் ஆண்டு கன்னட திரையுலகில் Kirik Party படத்தில் அறிமுகமானார். தெலுங்கில்  "சலோ" படத்தில் 2018 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்தார். பின்னர் அதே ஆண்டு வெளியான "கீதா கோவிந்தம்" திரைப்படம் அவரை இந்திய அளவில் புகழ் பெற வைத்தது.

Rashmika Mandanna Latest Photoshoot with Avinash Gowariker

2020 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு உடன் ஜோடி சேர்ந்த Sarileru Neekevvaru படத்தின் மூலம் முன்னணி கதாநாயகியானார். தமிழில் இந்த ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான "சுல்தான்" படத்தின் மூலம் அறிமுகமானார். கடந்தாண்டு அல்லு அர்ஜூனுடன் "புஷ்பா" படத்தில் நடித்து இந்திய முழுக்க முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

Rashmika Mandanna Latest Photoshoot with Avinash Gowariker

சமீபத்தில் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில்  3.2 கோடி ரசிகர்கள் பின் தொடரும் முதல் தென்னிந்திய நடிகை என்ற சாதனையை படைத்திருக்கிறார் ராஷ்மிகா மந்தனா. மேலும் தற்போது ரன்பீர் கபூருக்கு ஜோடியாக அனிமல் படத்திலும், விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்திலும் நடித்து வருகிறார்.  இந்த வாரிசு படத்தின் படப்பிடிப்பு தற்போது தெலுங்கானா மாநிலம் ஐத்ராபாத்தில் முழு வீச்சில் நடந்து வருகிறது.

Rashmika Mandanna Latest Photoshoot with Avinash Gowariker

இந்நிலையில் கருப்பு நிற உடையில் ராஷ்மிகா மந்தனா போட்டோ ஷூட் நடத்தி போட்டோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். இந்த போட்டோக்கள் இன்ஸ்டாகிராமில் மட்டும் 2 மில்லியன் லைக்குகளை பெற்றுள்ளது. இந்த போட்டோக்களை போட்டோகிராபர் அவினாஷ் கவுரிகர் எடுத்திருந்தார். கருப்பு வெள்ளை நிறத்தில் இந்த புகைப்படங்கள் அமைந்துள்ளன.

Rashmika Mandanna Latest Photoshoot with Avinash Gowariker

Also Read | 'வெந்து தணிந்தது காடு' படத்தின் புதிய Theatrical ரிலீஸ் போஸ்டர்.. மரண மாஸ் லுக்கில் சிம்பு!

தொடர்புடைய இணைப்புகள்

Rashmika Mandanna Latest Photoshoot with Avinash Gowariker

People looking for online information on Rashmika Mandanna, Rashmika Mandanna Latest Photoshoot will find this news story useful.