தலைவர் 168 : சிறுத்தை சிவா - ரஜினி படத்தில் இதுவரை ஏற்காத வேடத்தில் நயன்தாரா..!
முகப்பு > சினிமா செய்திகள்ரஜினியின் 168-வது படத்தில் நயன்தாரா நடிக்கும் கதாபாத்திரம் குறித்து தெரிய வந்துள்ளது.

இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்திற்கு தலைவர் 168 என தற்போது பெயரிடப்பட்டுள்ளது. குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி ஆகியோர் இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இமான் இத்திரைப்படத்துக்கு இசையமைக்க, வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார். சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. அண்மையில் இப்படத்தில் நயன்தாரா இணைவதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ரஜினி படத்தில் நயன்தாராவின் கேரக்டர் பற்றி தகவல் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தில் நயன்தாரா வக்கீல் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இதுவரை பல வேடங்களில் நடித்துள்ள நயன்தாரா முதல் முறையாக வழக்கறிஞர் வேடத்தில் கருப்பு கோட் மாட்டவுள்ளார். ரஜினியுடன் சந்திரமுகி, குசேலன், தர்பார், படங்களில் கலக்கிய நயன்தாரா இதில் நான்காவது முறையாக ரஜியுடன் சேர்ந்து நடிக்கிறார்.