தலைவர் 168 : படக்குழு வெளியிட்ட புதிய ஸ்டில்! வேற லெவல் எனர்ஜி.. நீங்களே பாருங்க..!
முகப்பு > சினிமா செய்திகள்ரஜினிகாந்த் நடிக்கும் படத்தில் இருந்து படக்குழு புதிய ஸ்டில்லை ரிலீஸ் செய்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படத்திற்கு தலைவர் 168 என்று தற்போது பெயரிடப்பட்டுள்ளது. வீரம், விஸ்வாசம் உள்ளிட்ட படங்களை இயக்கிய சிவா இத்திரைப்படத்தை இயக்குகிறார். நடிகை குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் மற்றும் நயன்தாரா ஆகியோர் இத்திரைப்படத்தில் நடிக்கின்றனர். இமான் இசையமைக்கும் இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
இந்நிலையில் தலைவர் 168 படக்குழு புதிய ஸ்டில் ஒன்றை வெளியிட்டுள்ளது. இயக்குநர் சிவா, ஒளிப்பதிவாளர் வெற்றி ஆகியோர் படக்குழுவுடன் இருக்கும் புகைப்படத்தை அவர்கள் வெளியிட்டுள்ளனர். இதில் இயக்குநர் சிவா செம எனர்ஜியுடன் காணப்படுகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடந்து வருகிறது.
#Thalaivar168 pic.twitter.com/rknjmzFtTi
— vetri (@vetrivisuals) February 12, 2020
Tags : Rajinikanth, Siruthai Siva, Nayanthara, Meena, Thalaivar 168