Video: வெளிநாட்டில் வாழும் தமிழர்களுக்கு தலைவர் சொன்ன மேசேஜ் “நீங்க கொடுக்கற பரிசு இது தான்”!
முகப்பு > சினிமா செய்திகள்கொரோனாவின் தாண்டவமும், உலக அளவில் அது ஏற்படுத்திய தாக்கங்களும் நாம் அனைவரும் அறிந்ததே. இந்தியாவிலும், தமிழக அளவிலும் அதன் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதை தடுக்க அரசாங்கமும் மருத்துவத்துறையும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

அனைத்து துறைகளும் முடங்கியுள்ள நிலையில் மக்களிடையே நம்பிக்கையை தக்கவைக்க சினிமா பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் வீடியோ வெளியிட்டு வருகின்றனர். இந்த வரிசையில் தலைவர் ரஜினியும் ஒரு காணொலியை வெளியிட்டிருக்கிறார்.
வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்காக இந்த வீடியோவில் பேசிய அவர், அவர்கள் குடும்பத்தினர் அவர்களையே நினைத்துக் கோண்டிருப்பதை குறிப்பிட்டார். இந்த புத்தாண்டில் நாம் நம்மை கொரோனாவிடம் இருந்து பாதுகாத்துக்கொள்வது தான் நாம் ஒருவருக்கொருவர் அளிக்கும் பரிசு என அவர் குறிப்பிட்டார். இந்த வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுக்க கொரோனாவை தடுக்க ஊரடங்கு நீட்டிக்கப் பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. நடுத்தர குடும்பத்தினர் வீட்டில் இருந்தவாறு அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் சூழலில், தினக்கூலி, ஏழைகள் மட்டும் வெளிமாநில மக்களுக்கு உதவ அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது.
உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு எனது புத்தாண்டு வாழ்த்துகள். 🙏🏻 #StayHomeStaySafe #PracticeSocialDistancing #இதுவும்_கடந்து_போகும் #EvenThisWillPass pic.twitter.com/hkwLqORr8q
— Rajinikanth (@rajinikanth) April 14, 2020