IRAVIN NIZHAL
www.garudabazaar.com

சந்திரமுகி - 2 ஷூட்டிங்.. ரஜினி காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய லாரன்ஸ்.. நெகிழ்ச்சி பதிவு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நடிகர் ராகவா லாரன்ஸ் சந்தித்துள்ளார்.

Rajinikanth Raghava Lawrance Meeting Photos for Chandramukhi 2

Also Read | RIP: பிரபல இயக்குனர் - நடிகர் பிரதாப் போத்தன் மறைவு.. இந்திய திரையுலகுக்கு பேரிழப்பு

மலையாளத்தில் 1993ம் ஆண்டு வெளியான 'மணிசித்ரதாலு' படத்தை இயக்குனர் ஃபாசில் இயக்கியிருந்தார். மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால், சுரேஷ் கோபி, நெடுமுடி வேணு,  நடிகை ஷோபானா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இந்த படத்தை இயக்குநர் பி.வாசு கன்னடத்தில் 'ஆப்தமித்ரா' என்ற பெயரில் 2004ல் ரீமேக் செய்தார். கன்னடத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய திட்டமிட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

ரஜினிகாந்த் கேட்டுக்கொண்டதற்கு இணங்க 2005ம் ஆண்டு சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் சந்திரமுகி திரைப்படம் வெளியானது. தமிழ்நாட்டில் மட்டும் 890 நாட்கள் ஓடி இந்தப்படம் மிகப்பெரிய சாதனை படைத்தது.

Rajinikanth Raghava Lawrance Meeting Photos for Chandramukhi 2

இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் ரஜினியுடன், வடிவேலு, பிரபு, ஜோதிகா, நயன்தாரா, நாசர் உள்ளிட்டோர் சந்திரமுகி படத்தில் நடித்திருந்தனர். வித்யாசாகர் இசையமைத்து இருந்தார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு, நடிகர் ராகவா லாரன்ஸ், சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பி.வாசு இயக்கும் சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் நடிப்பதாக அறிவித்தார். அந்த அறிவிப்பில்,  ''நண்பர்களே நான் ஒரு முக்கியமான அறிவிப்பை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். எனது அடுத்த படம் தலைவர் ரஜினி நடித்த சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் ஆகும். தலைவரின் அனுமதியுடன் இத்திரைப்படத்தில் நடிப்பது எனக்கு அதிர்ஷ்டம். இப்படத்தை பி.வாசு இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் இத்திரைப்படத்தை தயாரிக்கிறார்கள்'' என லாரன்ஸ் அறிவித்திருந்தார்.

Rajinikanth Raghava Lawrance Meeting Photos for Chandramukhi 2

இந்த படத்தின் அறிவிப்பு 2020 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டதிலிருந்து, ரசிகர்கள் முதல் பாகத்தில் நடித்த நடிகர்கள் இந்தப் படத்தில் மீண்டும் நடிப்பார்களா என்பதை அறிய மிகவும் ஆர்வமாக இருந்தனர்.

சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில், நடிகர் மற்றும் நடன இயக்குனர் ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ளது பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு, கடந்த ஜூன் மாதம் வெளியாகி இருந்தது. இயக்குனர் பி. வாசு இயக்கும் இந்த படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

Rajinikanth Raghava Lawrance Meeting Photos for Chandramukhi 2

முதல் பாகத்தில், காமெடியில் அதகளம் பண்ணிய வடிவேலு, இரண்டாம் பாகத்திலும் இணைந்துள்ளார். மேலும், சந்திரமுகி 2 படத்திற்கு, பாகுபலி மற்றும் RRR படங்களுக்கு இசையமைத்த கீரவாணி இசையமைக்க உள்ளார். ஒளிப்பதிவாளராக RD ராஜசேகர் ஒப்பந்தமாக, கலை இயக்குனராக தோட்டா தரணி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி இருந்தது.

Rajinikanth Raghava Lawrance Meeting Photos for Chandramukhi 2

'சந்திரமுகி 2' படத்தின் ஷூட்டிங் இன்று ஜூலை 15 முதல், மைசூரில் ஆரம்பமாக உள்ளது, இரண்டு வாரம் அங்கே படப்பிடிப்பு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று ரஜினியை அவரது இல்லத்தில் ராகவா லாரன்ஸ் சந்தித்து சந்திரமுகி 2 படத்திற்காக சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் ஆசி பெற்றார் ராகவா லாரன்ஸ். இது தொடர்பான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

Also Read | சிவகார்த்திகேயன் நடிக்கும் 'மாவீரன்'.. இதான் தெலுங்கு தலைப்பா? ஆஹா இதுவும் செம்ம மாஸா இருக்கே!

தொடர்புடைய இணைப்புகள்

Rajinikanth Raghava Lawrance Meeting Photos for Chandramukhi 2

People looking for online information on Chandramukhi 2, Raghava Lawrance, Raghava Lawrance Meet Rajinikanth, Super Star Rajinikanth will find this news story useful.