''தர்பாருக்கு போகாதீங்கனு ஒருத்தர் வாட்ஸ் அப்ல சொல்றாரு..'' - பிரபல ஹீரோ பஞ்ச்
முகப்பு > சினிமா செய்திகள்சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் கடந்த ஜனவரி 9 ஆம் தேதி வெளியான 'தர்பார்' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பாக சுபாஷ்கரன் இந்த படத்தை தயாரித்துள்ளார்.

இந்த படத்தில் ரஜினிகாந்த்திற்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோகி பாபு, ஸ்ரீமன், பேபி மானஸ்வி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்த இந்த படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ரசிகர்கள் மற்றும் நண்பர்களுக்கு வணக்கம், சிலர் தலைவர் படம் நல்ல ஓடாதுனு நினைக்ககுராங்க. குறிப்பாக ஒருத்தர் நிறைய விஷயங்கள் பண்றாரு. வாட்ஸ் அப்பில் தர்பார் படத்துக்கு போகாதனு சொல்றார்.
ஆனால் இது எல்லாவற்றையும் மீறி தலைவர் பாக்ஸ் ஆபிஸில் பல்வேறு சாதனைகளை புரிந்து வருகிறது. இலைய கைல மறைக்கலாம், ஆனா மலைய மறைக்க முடியாது. மலை டா அண்ணாமலை, அந்த ஆண்டவனே நம்ப பக்கம். என்று குறிப்பிட்டுள்ளார்.