RRR Others USA
www.garudabazaar.com

கமல்ஹாசன் தமிழில் வெளியிட்ட '83' படத்தை பார்த்து ரஜினி செய்த டிவிட்டர் விமர்சனம்! வைரலான TWEET!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கமல்ஹாசன் தமிழில் ரிலீஸ் செய்த 83 படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் டிவிட்டரில் பாராட்டியுள்ளார்.

Rajinikanth Appreciates Kamal Haasan's Distributed Movie 83

83

இந்தியை மூலமாக கொண்டு ரன்வீர் சிங், ஜீவா, தீபிகா படுகோனே நடிப்பில் 83 படம்  ரிலீசாகி உள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பிராந்திய மொழிகளிலும் வெளியானது. இந்த படம் டிசம்பர் 24 ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி வெளியானது. இந்த படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை கமல்ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Rajinikanth Appreciates Kamal Haasan's Distributed Movie 83

கபில்தேவ்

1983 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை இறுதி ஆட்டத்தில் வீழ்த்தி கோப்பையை வென்றது. இதனை மையமாக வைத்தும் கபில்தேவின் வாழ்க்கை சம்பவங்களை கொண்டும் 83 படம் எடுக்கப்பட்டுள்ளது.

Rajinikanth Appreciates Kamal Haasan's Distributed Movie 83

83 படக்குழு

இந்தப் படத்தில் ஸ்ரீகாந்த் ரோலில் தமிழ் நடிகர் ஜீவாவும், கபில் தேவாக நடிகர் ரன்வீர் சிங்கும் நடித்துள்ளனர். இதில் கபில் தேவ் மனைவி கதாபாத்திரத்தில் தீபிகா படுகோனே நடிக்கிறார். ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ரன்வீர் சிங் தீபிகா படுகோனே இந்தப்படத்தை தயாரித்துள்ளனர். சமீபத்தில் ’83’ படத்தின் டிரெய்லர் வீடியோ தொகுப்பை துபாயில் உள்ள உலகின் உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபாவில் இடம்பெறச் செய்தது படக்குழு, படத்தை விளம்பரப்படுத்த இதை செய்தது.

Rajinikanth Appreciates Kamal Haasan's Distributed Movie 83

ரஜினிகாந்த் பாராட்டு

இந்நிலையில் இந்த படத்தை பார்த்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் டிவிட்டரில் படம் பற்றி பதிவு செய்துள்ளார்.  அதில், கிரிக்கெட் வீரர் கபில் தேவ் மற்றும் 83 படக்குழுவினரை டேக் செய்து "என்ன ஒரு அருமையான படம்! பிரம்மிக்க தக்க படம்" என ரஜினிகாந்த் வாழ்த்து கூறியுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Rajinikanth Appreciates Kamal Haasan's Distributed Movie 83

People looking for online information on 83, ஜீவா, தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், Burj Khalifa, Deepika Padukone, Jiiva, Kamal Haasan, Kapil Dev, Rajini kanth, Ranveer Singh will find this news story useful.