Jail Others
IKK Others
MKS Others
www.garudabazaar.com

BREAKING: விக்ரம் படத்தின் ரிலீஸ் எப்போ? 4 வருடங்களுக்கு பிறகு வெள்ளித்திரைக்கு வரும் கமல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கமல்ஹாசன் நடிக்கும் "விக்ரம்" படத்தை, மாநகரம், கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.

Kamal Haasan Vikram Movie Release Date Update

கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. இந்தப் படத்திற்கு 'ஜல்லிக்கட்டு' படத்திற்காக தேசிய விருது வென்ற ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். விக்ரம் படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ஆடியோ உரிமை நல்ல விலைக்கு விற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Kamal Haasan Vikram Movie Release Date Update

இந்த படத்தில் கமல்ஹாசனுடன் நடிகர்கள் விஜய் சேதுபதியும், மலையாள நடிகர் பகத் பாசிலும் இணைந்து நடிக்கின்றனர். கமல்ஹாசனின் மகனாக காளிதாஸ் ஜெயராம் நடிக்கிறார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஷிவானியும், மைனா நந்தினியும் நடிக்கின்றனர். கமல்ஹாசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் முன்னோட்டம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. சில மாதங்களுக்கு முன்பு 'விக்ரம்' படத்தின் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக சிலநாட்களுக்கு முன் சென்னையில் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து காரைக்குடியில் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்தது.  பின் இந்த படத்தின் இரண்டாவது அடுத்தக்கட்ட படப்பிடிப்பு கோவை ,பாண்டிச்சேரியில் நடந்தது.

Kamal Haasan Vikram Movie Release Date Update

இந்நிலையில் இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பு  நேற்று சென்னையில் தொடங்கியது என்றும், ஜனவரி 31 வரை இடைவிடாத படப்பிடிப்பு நடைபெறும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படப்பிடிப்பில் டிசம்பர் 19 முதல் கமல் இணைகிறார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனவரி 14 -17 வரை பொங்கலுக்காக மட்டுமே ஷூட்டிங் பிரேக் விடப்படும் என்றும் விக்ரம் படம் வரும் 2022 மார்ச் 31 ஆம் தேதி தியேட்டரில் ரிலிசாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தொடர்புடைய இணைப்புகள்

Kamal Haasan Vikram Movie Release Date Update

People looking for online information on கமல் ஹாசன், விக்ரம், Fahaad Faasil, Kamal Haasan, Lokesh Kanagaraj, Vijay Sethupathi, Vikram will find this news story useful.