Reliable Software
www.garudabazaar.com

Video: போட்றா வெடிய.. சென்னை திரும்பிய 'அண்ணாத்த' ரஜினி.. ஆரத்தி எடுத்து வரவேற்றது யார் பாருங்க!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த.

Rajini arrives chennai after Annaatthe shoot viral stills video

ரஜினியுடன் குஷ்பூ, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இமான் இப்படத்திற்கு இசையமைக்க, சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.  இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடித்துக் கொண்டிருக்கும்போது ஹைதராபாத்தில் நடந்த படப்பிடிப்பின்போது படக்குழுவினர் நாலுபேருக்கு கொரோனா ஏற்பட்டதை அடுத்து படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது.

Rajini arrives chennai after Annaatthe shoot viral stills video

இதனை அடுத்து ரஜினிகாந்த் மற்றும் பட குழுவினர் பரிசோதனை மேற்கொண்டனர். பின்னர் ரஜினிகாந்துக்கு நெகட்டிவ் என்று ரிசல்ட் வந்தாலும அவருக்கு உயர் ரத்த அழுத்த சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மீண்டும் அண்ணாத்தே படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து அண்ணாத்தே படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வந்த நிலையில் இந்த படப்பிடிப்பில் நயன்தாரா கலந்துகொண்ட ஸ்டில்கள் வெளியாகி வைரலாகின. 

Rajini arrives chennai after Annaatthe shoot viral stills video

இந்நிலையில் ரஜினிகாந்த் அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பி இருக்கிறார். அவருக்கு அவருடைய மனைவி லதா ரஜினிகாந்த் ஆரத்தி எடுத்து வரவேற்றுள்ளார்.

இந்த வீடியோவும் ரஜினிகாந்த் சென்னை திரும்பிய புகைப்படங்களும் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றன.  இந்த படம் பற்றிய முக்கிய தகவல்கள் அதிகாரபூர்வமாக விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ: "அட அது நான் இல்லப்பா.. நடந்தது இதுதான்!".. பிரபல நடிகர் 'லொள்ளு சபா' மாறன் Exclusive!

தொடர்புடைய இணைப்புகள்

Rajini arrives chennai after Annaatthe shoot viral stills video

People looking for online information on Annaatthe, D Imman, Rajinikanth, Siruthai Siva will find this news story useful.