ரஜினியின் அரசியல் என்ட்ரியும்.. சீமானின் கருத்தும் - செம ரிப்ளை சொன்ன ராகவா லாரன்ஸ்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ரஜினியின் அரசியல் என்ட்ரி குறித்தும், அதற்கு சீமான் சொன்ன கருத்து குறித்தும் ராகவா லாரன்ஸ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ரஜினியின் அரசியல் குறித்து லாரன்ஸ் கருத்து | raghava lawrence statement about rajini's political entry and seeman's opinion.

தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார் என புகழப்படுபவர் ரஜினி. இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இதில் குஷ்பூ, மீனா, நயன்தாரா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று நடிகர் ரஜினிகாந்த், தனது அரசியல் வருகை குறித்து தனது மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து பேசினார். இதில் ரஜினி பேசிய கருத்துக்கு பல்வேறு விதமான பாராட்டுக்களும் விமர்சனங்களும் குவிந்து வருகின்றன.

இந்நிலையில் நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினியின் அரசியல் என்ட்ரி குறித்து பதிவிட்டுள்ளார். இதுகுறித்த தனது பதிவில், மகாகவி பாரதியார் பாடலை சுட்டிகாட்டி, அவர் ரஜினியின் அரசியல் வருகையை பாராட்டியுள்ளார். மேலும் ரஜினியின் அரசியல் என்ட்ரி குறித்து பாராட்டு தெரிவித்த சீமானுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். ரஜினியின் எண்ணங்கள் நிறைவேற ராகவேந்திரா சுவாமியை வேண்டிக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Entertainment sub editor