‘கறுத்த பெண்ணே’ சென்சேஷன் Sanah Moidutty-ன் அடுத்த பாடல்
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Aug 21, 2019 04:31 PM
பிரபல பின்னணி பாடகி சனா மொய்டுட்டியின் உருவாக்கத்தில் வெளியான ‘கறுத்த பெண்ணே’ என்ற மலையாள ராப் பாடல் சமூக வலைதளாங்களில் சென்சேஷனல் பாடல் வைரலானது.

ஏ.ஆர்.ரகுமான் இசையில் சூர்யா நடித்த ‘24’ படத்தில் இடம்பெற்ற ‘மெய் நிகரா’ பாடலை பாடியவர் சனா மொய்டுட்டி. மலையாள பாடகியான இவர் ‘மொஹெஞ்சதரோ’, ‘மேரி பியாரி பிந்து’ உள்ளிட்ட பாலிவுட் திரைப்படங்களிலும் அழகிய பாடல்களை பாடியுள்ளார்.
கடந்த 1994ம் ஆண்டு மலையாளத்தில் மோகன்லால்-ஷோபனா நடிப்பில் வெளியான ‘தென்மாவின் கொம்பத்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘கறுத்த பெண்ணே’ என்ற பாடலை ஹிந்துஸ்தானி, பாப், கர்நாடிக் என பல விதமான இசைகளின் கலவையில் சனா பாடி வெளியிட்ட பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இந்நிலையில், இயக்குநர் சரண் இயக்கத்தில் பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரவ் நடித்து வரும் ‘மார்க்கெட் ராஜா MBBS' திரைபப்டத்தில் ‘கண்ணாலே’ என்ற பாடலை சனா பாடியுள்ளார். அத்துடன் அந்த பாடலின் மியூசிக் வீடியோவில் தோன்றி நடனமும் ஆடியுள்ளார். சைமன் கிங் இசைமையத்துள்ள இப்படத்தில் ‘கண்ணாலே’ பாடலுக்கு தமயந்தி வரிகள் எழுதியுள்ளார்.
இந்த பாடல் பாடியது குறித்து சனா கூறுகையில், ‘மார்க்கெட் ராஜா MBBS' படத்தில் இந்த பாடலை பாடியதில் மகிழ்ச்சி. இந்த தமிழ் பாடலை பாடியது சிறந்த அனுபவமாக இருந்தது. இந்த பாடலின் லிரிக் வீடியோவில் நடித்ததில் மகிழ்ச்சி. திரைப்படத்தின் ரிலீசுக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.