இந்த படம் தியேட்டரில் வெளியாகாமல் நேரடியாக டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் வெளியாகிறதா ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்தியாவில் ஊரடங்கு காரணமாக வருகிற மே 3 ஆம் தேதி வரை மளிகை, காய்கறி, மருத்துவமனை, மருந்துக்கடைகள் உள்ளிட்ட சில அத்தியாவசிய தேவைகள் தவிர மக்கள் வெளியில் வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Producers deny rumours of Anushka Shetty and Madhavan's Nishabdham direct release on OTT | அனுஷ்கா, மாதவனின் நிசப்தம் படம் குறித்த வதந்தியை மறுத்த தய

தமிழகத்தில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான வணிக வளாகங்கள், திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனையடுத்து இந்த மாதம் வெளியாகவிருந்த படங்களின் ரிலீஸ் தேதி தள்ளிப்போகியுள்ளன.

இந்நிலையில் அனுஷ்கா மற்றும் மாதவன் இணைந்து நடித்துள்ள 'நிசப்தம்' படம் கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி வெளியாகவிருந்தது. தற்போது நிலவிவரும் ஊரடங்கின் காரணமாக இந்த படம் திரையரங்குளில் வெளியாகாமல் நேரடியாக OTT எனப்படும் டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் வெளியாகலாம் என்று செய்திகள் பரவத் துவங்கியது.

இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான பீப்பிள் மீடியா ஃபேக்டரி தனது ட்விட்டர் பக்கத்தில், 'இந்த படம் துவங்கிய நாள் முதல், இந்த படத்தின் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் கஷ்டமான நேரங்களில் உறுதுணையாக இருந்துள்ளனர். குறிப்பாக அனுஷ்கா ஷெட்டி மேடம்.  எந்த ஆதாரமும் இல்லாத வதந்திகளை நம்பாதீர்கள். முக்கிய திட்டமிருந்தால் நாங்களே அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்'' என்று தெரிவித்துள்ளது.

Entertainment sub editor