''மாஸ்டர் ரிலீஸாகியிருந்தால், விஜய் கெரியரில் மிகப்பெரிய வெற்றியை..'' - பிரபல தயாரிப்பாளர்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய்யின் படங்கள் குறித்து பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் மனம் திறந்து பேசியுள்ளார். 

விஜய்யின் மாஸ்டர் குறித்து பிரபல தயாரிப்பாளர் நம்பிக்கை | producer dhananjayan opens on vijay's master sucess and his early film career

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் விஜய். இவர் நடித்த துப்பாக்கி, கத்தி, தெறி, மெர்சல் உள்ளிட்ட திரைப்படங்கள் ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்றன. இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், ஷாந்தனு, ஆர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ள இத்திரைப்படத்தின் ரிலீஸ் கொரோனா வைரஸ் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன், நடிகர் விஜய் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். விஜய்யின் ஆரம்பக் கால சினிமா முதல் தற்போது அவரது மார்கெட் வரை விரிவாக உரையாடினார். மேலும் அவர் கூறியதாவது, ''விஜய்யின் படங்கள் எப்போதுமே நல்ல இலாபத்தை பெற்று தருகின்றன. அந்த வகையில் மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் ஆகியிருந்தால், இலாபத்தின் அடிப்படையில் இது விஜய் கேரியரில் மிகப்பெரிய வெற்றியாக அமைந்திருக்கும். காரணம், இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் பல லைவ் லொகேஷன்களில், குறைவான பட்ஜட்டில் உருவாக்கியுள்ளார். அதனால் மாஸ்டர் திரைப்படம் எப்போது ரிலீஸானாலும், அது விஜய் கேரியரில் பெரிய இலாபத்தை கொடுக்கும் படமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை'' என அவர் தெரிவித்துள்ளார்.  

''மாஸ்டர் ரிலீஸாகியிருந்தால், விஜய் கெரியரில் மிகப்பெரிய வெற்றியை..'' - பிரபல தயாரிப்பாளர்.! வீடியோ

தொடர்புடைய செய்திகள்

விஜய்யின் மாஸ்டர் குறித்து பிரபல தயாரிப்பாளர் நம்பிக்கை | producer dhananjayan opens on vijay's master sucess and his early film career

People looking for online information on Dhananjayan, Master, Vijay will find this news story useful.