சல்மான் கான், சிவகார்த்திகேயன் வரிசையில் டிசம்பர் ரேஸில் இணைந்த பிரபல ஹீரோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாலிவுட் நடிகர் சல்மான் கான், கோலிவுட் ஸ்டார் சிவகார்த்திகேயனை தொடர்ந்து டிசம்பர் மாதம் ரிலீசாகும் திரைப்படங்களுடன் பிரபல ஹீரோவின் திரைப்படமும் இணைந்துள்ளது.

Jiiva's Seeru joins December release race with Salman khan and Sivakarthikeyan

இயக்குநர் ரத்தின சிவா இயக்கத்தில் நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள ‘சீறு’ திரைப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக ரியா சுமன் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். வில்லனாக பிரபல நடிகர் நவ்தீப் நடித்து வருகிறார். பிரசன்னா எஸ்.குமார் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பை கவனிக்கிறார்.

வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார். காதல், ஆக்‌ஷன், டிராம, எமோஷன்ஸ் என கமர்ஷியல் படமாக ஜீவாவின் ‘சீறு’ திரைப்படம் உருவாகியுள்ள இப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வரும் டிசம்பர்.20ம் தேதில் ரிலீசாகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஏற்கனவே பிரபுதேவா இயக்கத்தில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடித்துள்ள ‘தபங் 3’ திரைப்படம் வரும் டிசம்பர் 20ம் தேதி ரிலீசாகிறது. இத்துடன் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஹீரோ’ திரைப்படமும் வரும் டிச.20ம் தேதி ரிலீசாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.