Jail Others
IKK Others
MKS Others
www.garudabazaar.com

அடடே.. ஆச்சர்யக்குறி! அமைதியா உட்கார்ந்து பேசிக்கொள்ளும் பிரியங்கா & தாமரை?! #BiggBoss5

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டில் தாமரை மற்றும் பிரியங்கா இருவருக்குமிடையே நடக்கும் சண்டைகள் பிக்பாஸ் வீட்டையும் பிக்பாஸ் ரசிகர்களையும் எப்போதும் பரபரப்பாக வைத்திருப்பவை.

priyanka thamarai heartfelt conversation biggbosstamil5 promo

பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் அனைவரும் கட்சிகளைத் தொடங்கியுள்ளனர். பிக்பாஸ் வீட்டினர் 3 அணிகளாக பிரிந்து தொடங்கியுள்ள இந்த கட்சிகளுக்கு பெயர்கள், கொடிகள், கட்சி சின்னங்கள் மற்றும் கட்சிக் கொள்கைகள், அவற்றை பிரச்சாரம் செய்வதற்கான புரட்சி வாசகங்கள் அனைத்துமே பிரபலமாகி வருகின்றன.

priyanka thamarai heartfelt conversation biggbosstamil5

முன்னதாக பிரியங்கா, பிக்பாஸ் வீட்டுக்குள் நடந்த கட்சிக் கொடி நாட்டும் Task-இன் போது, பிரியங்கா, தாமரையை “தெரியல தெரியலனு சொல்றீங்க.. நாடகம் போடுறீங்க! நாடகம் போடுறீங்க!” என்று பிரச்சார கோஷ பாடலை பாடுவதுபோல், பாடிக்கொண்டே, தன் கட்சியினரான அபினய் மற்றும் பாவனியுடன் சேர்ந்து நடனம் ஆடினார்.

priyanka thamarai heartfelt conversation biggbosstamil5

இதற்கு தாமரை மிகவும் வருந்தினார். தன் தொழிலுடன் தொடர்புப் படுத்தி பிரியங்கா பாடுவதாகக் குறிப்பிட்டு, அடுத்ததாக பிக்பாஸ் வீட்டில் பிரியங்கா, சிபி மற்றும் சஞ்சீவ் மூவரும் பேசிய மாநாட்டில் தாமரை பிரியங்காவிடம் வாதம் செய்தார். ஆனால் தான் அவ்வாறு தாமரையின் தொழிலை அர்த்தப்படுத்தி பேசவில்லை என்றும், பிக்பாஸ் வீட்டில் நாடகம் போடுவதையே சுட்டிக் காட்டியதாக விளக்கம் அளித்தார்.

priyanka thamarai heartfelt conversation biggbosstamil5

இந்நிலையில் தற்போது பிரியங்காவும், தாமரையும் பேசிக் கொள்ளும் சம்பவம் அடுத்த எபிசோடில் வந்திருக்கிறது. இதில் தாமரையை நோக்கி வந்த பிரியங்கா,  “பேசலாமா.. ரெடியா..?” என்று கேட்கிறார்.  அவருக்கு பதில் அளித்த தாமரை, காலை வணக்கம் சொல்கிறார். அப்போது தாமரையை அரவணைக்கும் பிரியங்கா, அதன்பிறகு, “நீ ஏன் தேவையில்லாத விஷயத்தில் நுழைகிறாய்?” என்று கேட்கிறார்.

priyanka thamarai heartfelt conversation biggbosstamil5

மேலும், “உசுப்பேத்துறேன்னு நீயே சொல்ற.. ஆனால் உன் விஷயத்துல தான் நான் எப்பவுமே கேக்கல.. நீ தெரியலனு தெரியலனு சொல்றீங்க.. ஆனா ரீல் நல்லா விட்டீங்கனு சொன்னேன், அது எப்பவுமே சொல்றதுதான். அதையெல்லாம் மாத்திக்க முடியாது!” என்று பிரியங்கா சொல்கிறார்.

priyanka thamarai heartfelt conversation biggbosstamil5

இதற்கு பதில் அளித்த தாமரை, “நேற்று நடந்த சம்பவமே தெரியாமல் சம்மந்தம் இல்லாமல் கத்துகிறாய். கேமே புரியவில்லை. அது புரிந்தால், நீ வேறு இல்லை.. அவர் வேற இல்லை” என கூறுகிறார். இவர்களின் இந்த உரையாடல் இவர்களின் சண்டைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா இல்லை கமா போட்டு கண்டினியூ பண்ண வைக்குமா? என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தொடர்புடைய இணைப்புகள்

priyanka thamarai heartfelt conversation biggbosstamil5 promo

People looking for online information on தாமரை பிரியங்கா சண்டை, தாமரை பிரியங்கா மோதல், பிக்பாஸ், விஜய் டிவி, BB5, Bigg Boss 5 Tamil, Bigg Boss Tamil 5, BiggBoss5, Biggbosstamil, BiggBossTamil5, Priyanka, Thamarai priyanka fight, Thamarai Selvi, Thamaraiselvi will find this news story useful.