Veetla Vishesham Others Page USA

பிரபாஸ் - தீபிகா படுகோனே நடிக்கும் புதிய PAN INDIA படம்.. அமிதாப் கொடுத்த வேற லெவல் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஐதராபாத்: பாகுபலி பிரபாஸ் - தீபிகா படுகோனே நடிக்கும் புதிய PAN INDIA படத்தின் புதிய அப்டேட்டை அமிதாப் பச்சன் வெளியிட்டுள்ளார்.

Prabhas Deepika Padukone Project K update from Amitabh Bachchan

Also Read | பையா, மங்காத்தா பாடல்களுக்கு சாய்பல்லவியுடன் டான்ஸ் ஆடிய யுவன் சங்கர் ராஜா.. செம்ம CUTE வீடியோ!

தெலுங்கு நடிகர் பிரபாஸ் ‘பாகுபலி’ சீரிஸ் படங்களின் வெற்றிக்கு பிறகு பரந்த ரசிகர் பட்டாளத்தை பெற்றார். இவரின் அடுத்த படமான 'சாஹோ' விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அடுத்ததாக காதலை மையமாக வைத்து 350 கோடி ரூபாய் செலவில் ராதா கிருஷ்ணா குமார் இயக்கத்தில் 'ராதே ஷியாம்' படத்தில் நடித்தார். கடந்த மார்ச் மாதம் வெளிவந்த இந்த படமும் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

பிரபாஸ் அடுத்து நான்கு பெரிய படங்களை அறிவித்த பிறகு பிரபாஸ் ரசிகர்களிடம்  பெரும் உற்சாகம் ஏற்பட்டுள்ளது. தீபிகா படுகோனின் தெலுங்கு அறிமுகமபடமான, தற்காலிகமாக பிரபாஸ் 21 என பெயரிடப்பட்டுள்ள ப்ரோஜெக்ட் கே  படம், ஆதி புருஷ் மற்றும் கேஜிஎஃப் இயக்குனருடன் இணையும் சலார், சந்திப் ரெட்டி வாங்காவுடன் ஸ்பிரிட்  படம் என வரிசையாக படங்களை வைத்துள்ளார்.

Prabhas Deepika Padukone Project K update from Amitabh Bachchan

தீபிகா படுகோன், அமிதாப் பச்சன், பிரபாஸ் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கும் Project K படத்தின் முதல் கட்ட ஷீட்டிங் ஐதராபாத்தில் கடந்த ஆண்டு டிசம்பரில் துவங்கியது. இதில் நடிகை தீபிகா படுகோன், பிரபாஸ் கலந்து கொண்டனர்.

இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிகை திஷா பதானி நடிக்கிறார். வைஜெயந்தி மூவீஸ் சார்பில் தயாரிப்பாளர் அஸ்வினி தத் இந்த படத்தை தயாரிக்கிறார். இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் அமிதாப் பச்சன் கலந்து கொண்டார். மூன்றாம் கட்ட படப்பிடிப்பில் நடிகை திஷா பதானி இணைந்துள்ளார்.

Prabhas Deepika Padukone Project K update from Amitabh Bachchan

இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு 3 கட்டங்களாக நடைபெற்றது.  இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஜூன் மாதம் துவங்கியுள்ளது. தீபிகா படுகோன், பிராபாஸ், அமிதாப் பச்சன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

Prabhas Deepika Padukone Project K update from Amitabh Bachchan

இது குறித்து அமிதாப் தனது பிளாக்கில் எழுதியுள்ளார். அதில்," 9 மணி .. மேலும் கீழும் சில கண் சிமிட்டுகள் .. ஆறுதலாக வேலை செய்யுங்கள் .. இரு மொழிகளில் நடிப்பது உற்சாகமளிக்கிறது. ஆனால் பயமும், வேலையின் சுமையையும் எதிர்த்துப் போராட ஓடிவிடும். கவனமும் அக்கறையும் தேவை. ஒரு மெதுவான படி, எளிதாக ஏறுதல்.. நிற்பது, உட்காருவது, யோசிப்பது, விசித்திரமாக.. முன் எப்போதும் இல்லை.. இப்போது உள்ளது. . நான் மிக அதிகமாக புகார் செய்கிறேன் .. நான் சுருக்கமாக சொல்ல வேண்டும் .." என பதிவிட்டுள்ளார்.

Also Read | Halle Berry, Anne Hathaway, Michelle Pfeiffer வரிசையில் CAT WOMEN ஆக மாறிய மாளவிகா மோகனன்! இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே

தொடர்புடைய இணைப்புகள்

Prabhas Deepika Padukone Project K update from Amitabh Bachchan

People looking for online information on Amitabh Bachchan, Deepika Padukone, Prabhas, Project K movie, Project K Movie Update will find this news story useful.