Vilangu Others
www.garudabazaar.com

பிரபாஸ் - தீபிகா படுகோனே நடிக்கும் PAN INDIA படத்தின் ஷூட்டிங்! இணைந்த இந்திய சினிமாவின் TOP SUPER STAR

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஐதராபாத்: பாகுபலி பிரபாஸ் - தீபிகா படுகோனே நடிக்கும் புதிய PAN INDIA படத்தின் ஷூட்டிங்கில் இந்திய சினிமாவின் டாப் சூப்பர் ஸ்டார் இணைந்துள்ளார்.

Prabhas Deepika Padukone Amitabh Bachchan Project K Movie Update

"மூன்று நாட்களாக இந்த படத்தை பார்த்தேன்" - விஜய் ஆண்டனி நடித்த படத்தை பாராட்டிய Dr. ராமதாஸ்

தெலுங்கு நடிகர் பிரபாஸ் ‘பாகுபலி’ சீரிஸ் படங்களின் வெற்றிக்கு பிறகு பரந்த ரசிகர் பட்டாளத்தை பெற்றார். இவரின் அடுத்த படமான 'சாஹோ' விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அதனால் பாகுபலி இயக்குனர் ராஜமௌலியின் அறிவுரைப்படி காதலை மையமாக வைத்து 350 கோடி ரூபாய் செலவில் ராதா கிருஷ்ணா குமார் இயக்கத்தில் 'ராதே ஷியாம்' படத்தில் நடிக்கிறார். இந்த படம் 1970களில் ஐரோப்பாவில் நடப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. வரும் 2022 மார்ச் 11ல் ராதே ஷ்யாம் வெளிவருகிறது.

பிரபாஸ் அடுத்து நான்கு பெரிய படங்களை அறிவித்த பிறகு பிரபாஸ் ரசிகர்களிடம்  பெரும் உற்சாகம் ஏற்பட்டுள்ளது. தீபிகா படுகோனின் தெலுங்கு அறிமுகமபடமான, தற்காலிகமாக பிரபாஸ் 21 என பெயரிடப்பட்டுள்ள ப்ரொஜெக்ட் கே  படம், ஆடிபுருஷ் மற்றும் கேஜிஎஃப் இயக்குனருடன் இணையும் சலார், சந்திப் ரெட்டி வாங்காவுடன் ஸ்பிரிட்  படம் என வரிசையாக படங்களை வைத்துள்ளார்.

Prabhas Deepika Padukone Amitabh Bachchan Project K Movie Update

தீபிகா படுகோன், அமிதாப் பச்சன், பிரபாஸ் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கும் Project K படத்தின் முதல் கட்ட ஷீட்டிங் ஐதராபாத்தில் கடந்த ஆண்டு டிசம்பரில் துவங்கியது. இதில் நடிகை தீபிகா படுகோன், பிரபாஸ் கலந்து கொண்டுள்ளனர். வைஜெயந்தி மூவீஸ் சார்பில் தயாரிப்பாளர் அஸ்வினி தத் இந்த படத்தை தயாரிக்கிறார்.

Prabhas Deepika Padukone Amitabh Bachchan Project K Movie Update

இந்த படத்தில் உலகின் மிகப்பெரிய கேமராவான ARRI RENTAL ALEXA 65 பயன்படுத்தப்படுகிறது என படக்குழு அறிவித்துள்ளது. இந்த வகை கேமராவில் தான் உலகப்புகழ் பெற்ற Cats (2019), Joker (2019) ...Solo: A Star Wars Story (2018) ...If Beale Street Could Talk (2018) ...Bohemian Rhapsody (2018) ...Live by Night (2016) ...War for the Planet of the Apes (2017) போன்ற படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

Prabhas Deepika Padukone Amitabh Bachchan Project K Movie Update

இந்நிலையில் இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நேற்று முதல் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். இது குறித்து டிவிட்டரில் "முதல் நாள்.. முதல் ஷாட்.. 'பாகுபலி' பிரபாஸ் உடனான முதல் படம்.. மற்றும் அவரது அபார திறமை மற்றும் அவரது அதீத பணிவு ❤️❤️🙏🙏 .. கற்று கொள்ள வேண்டும்..!" என குறிப்பிட்டு டிவிட் செய்துள்ளார்.

வலிமை படத்தின் PROMO! அடுத்தடுத்து வெளியான மாஸ் - சென்டிமென்ட் காட்சிகள்

தொடர்புடைய இணைப்புகள்

Prabhas Deepika Padukone Amitabh Bachchan Project K Movie Update

People looking for online information on Amitabh Bachchan, தீபிகா படுகோனே, பாகுபலி பிரபாஸ், Deepika Padukone, K Movie, Prabhas will find this news story useful.