''என்ன யாரோ பயங்கரமா டென்ஷன் பண்ணிருக்காங்க'' - பிரபல தொகுப்பாளர் வெளியிட்ட ஃபோட்டோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அதன் காரணமாக பெரும்பாலான மக்கள் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எளிதில் பரவக்கூடியது என்பதால் மக்கள் வீட்டிலேயே இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Popular VJ Manimegalai shares her childhood photo on instagram | பிரபல டிவி தொகுப்பாளர் தனது சிறுவயது ஃபோட்டோவை பகிர்ந்துள்ளார்.

இந்திய அளவில் அனைத்து விதமான படப்பிடிப்புகள், அதன் சார்ந்த செயல்பாடுகள் என அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தனிமைப்படுத்தப்பட்ட நாட்கள் குறித்து பிரபலங்கள் அவ்வப்போது தங்களது சமூக வலைதளங்களில் பதிவுகள் எழுதி வருகின்றனர்.

இந்த பதிவுகள் அவ்வப்போது வைரலாகி வருகிறது. இந்நிலையில் பிரபல தொகுப்பாளர் மணிமேகலை தனது ட்விட்டர் பக்கத்தில் சிறு வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.  அந்த பதிவில், ''யாரோ என்ன பயங்கரமா டென்ஷன் பண்ணிருக்காங்க இந்த ஃபோட்டோ எடுக்கும் போது. அதான் மொகரக்கட்ட இப்படி இருக்கு. ஈஸியா என்னை கண்டுபிடிக்கலாம்'' என்று தெரிவித்துள்ளார்.

Entertainment sub editor