கொரோனா : தூய்மை பணியாளர்களுடன் 'பிரென்ட்ஷிப்' ஆன பிரபல சின்னத்திரை நட்சத்திரம்... Viral போட்டோ..!
முகப்பு > சினிமா செய்திகள்உலகம் முழுவதும் கொரோனா நோயின் அச்சுறுத்தலால் முடங்கி போய் இருக்கிறது. நாளுக்கு நாள் பயம் அதிகரித்து கொண்டே போகிறது. மக்கள் அனைவரும் வீட்டிற்குள் அடங்கி இருக்கின்றனர். பிரதமர் மோடி, 21 நாட்கள் 144 தடை சட்டம் விதித்து உத்தரவிட்டார். மேலும் தமிழகத்தில் போதுமான மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பிரபல தொகுப்பாளியான மணிமேகலை தனது கிராமத்து வீட்டில் தற்போது இருக்கிறார். இவர் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார். இந்நிலையில் அவர் தற்போது ஒரு பதிவு இட்டுள்ளார் அதில் "நான் தங்கியிருக்கும் கிராமத்தின் தூய்மை பணியாளர்கள். இந்த வெயிலிலும் இபப்டி கடினமாக உழைக்கிறார்கள். நான் இவர்களுடன் நட்பாகி விட்டேன்" என்று கூறியுள்ளார். இதற்கு பலரும் லைக்குகளை அள்ளி கொடுத்து வருகின்றனர்.
Tags : Manimegalai, Coorna, Lockdown, Covid19, Sanitary workers