பிரபல நடிகை அதிரடி.."அஜித் அழகு, ஆனா விஜய் தான் பிடிக்கும்"... குஷியான தளபதி ரசிகர்கள்....!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகம் முழுவதும் கொரோனா நோய் பரவி வருகிறது. மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி இருக்கின்றனர். இந்நிலையில் பிரபலங்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் ரசிகர்களுடன் தொடர்பு கொள்வது பெருமளவில் அதிகரித்து வருகிறது. அப்படி சமீபத்தில் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு நடிகை ராஷி கன்னா சொன்ன பதிலை தளபதி ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர் .

பிரபல நடிகை அதிரடி விஜய் தான் பிடிக்கும் Popular actress confess her favourite actor is thalapathy vijay

தெலுங்கு நடிகையான ராஷி கன்னா தமிழில் 'இமைக்க நொடிகள்' படம் மூலம் அறிமுகம் ஆனார். பின்பு சங்கத்தமிழன், வோல்டு பேமஸ் லவ்வர் போன்ற படங்களில் நடித்தவர், தற்போது அரண்மனை 3 மற்றும் நடிகர் சூர்யாவின் அருவா படத்தில் நடிக்கிறார். இந்நிலையில் தளபதி விஜய்யின் தீவிர ரசிகர் ஒருவர் ராஷியிடம் " உங்களுக்கு பிடித்த நடிகர் யார்?" என்று கேட்க, அதற்கு அவர் சற்றும் தயங்காமல் "அஜித் சார் அழகு, ஆனால் என் பேவரைட் தளபதி விஜய் தான்" என்று கூறியுள்ளார். இந்த பதிலை ஆயிரக்கணக்கான நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர்.

Entertainment sub editor