Reliable Software
www.garudabazaar.com

கர்ணன் பார்த்து நெகிழ்ந்து போன பிரபல 90ஸ் ஹீரோ.. மாரி செல்வராஜை நேரில் சென்று வாழ்த்தினார்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் தற்போது ஜகமே தந்திரம், கர்ணன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அடுத்ததாக ஹிந்தியில் அத்ரங்கி ரே, கார்த்திக் நரேன் இயக்கும் D43, செல்வராகவனின் நானே வருவேன் உள்ளிட்ட திரைப்படங்களை இவர் கைவசம் வைத்துள்ளார். மேலும் ஹாலிவுட்டிலும் தி கிரே மேன் படத்தில் நடிக்க இவர் ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் தற்போது தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டனியில் உருவாகியுள்ள கர்ணன் திரைப்படம்.

popular 90s hero appreciated karnanகர்ணன் பார்த்த பிரபல 90ஸ் ஹீரோ

கலைப்புலி தாணு தயாரிக்கும் இப்படத்தில் ரஜிஷா விஜயன், கௌரி கிஷன், லால், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கர்ணன் படத்தின் 'கண்டா வர சொல்லுங்க', 'பண்டாரத்தி புராணம்',  'உட்றாதீங்க யப்போ' போன்ற பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.  இந்நிலையில் முன்னதாக கர்ணன் திரைப்படம் ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீஸாகும் என்று கூறப்பட்டது. இதனிடையே தேர்தல் தேதிகள் மாற்றி வைக்கப்பட்டதாலும், ஊரடங்கு கடைபிடிக்கப்படலாம்  என்ற கருத்து நிலவி வருவதாலும் ஒருவேளை கர்ணன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்படுமா என்று ரசிகர்கள் குழப்பத்தில் இருந்த நிலையில், முன்னதாக அறிவிக்கப்பட்டபடியே  ஏப்ரல் 9-ம் தேதி உலகமெங்கும் கர்ணன் திரைப்படம் ரிலீசானது. இந்நிலையில் கர்ணன் திரைப்படத்தைப் பார்த்த நடிகர் பிரசாந்த் மாறி செல்வராஜ் மற்றும் தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

popular 90s hero appreciated karnanகர்ணன் பார்த்த பிரபல 90ஸ் ஹீரோ

தொடர்புடைய இணைப்புகள்

popular 90s hero appreciated karnanகர்ணன் பார்த்த பிரபல 90ஸ் ஹீரோ

People looking for online information on Karnan, Mari Selvaraj will find this news story useful.