Reliable Software
www.garudabazaar.com

ஜெயலலிதாவின் வாழ்க்கை படமான தலைவிக்கு எதிராக ஜெ.தீபா தொடர்ந்த வழக்கு.. தீர்ப்பு வெளியானது!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி வரும் திரைப்படம் 'தலைவி'. ஏ.எல்.விஜய் இயக்கும் இத்திரைப்படத்தில், ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத் நடிக்கிறார். இதில் அரவிந்த் சாமி எம்.ஜி.ஆர் வேடத்தில் நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இத்திரைப்படத்துக்கு இசையமைக்கிறார். எம்.ஜி.ஆர் வேடத்தில் அரவிந்த் சாமியின் தோற்றம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

court case against thalaivi movie is dismissed தலைவிக்கு எதிராக ஜெ.தீபா வழக்கு முடிவு

அதேபோல் இளம் வயது ஜெயலலிதாவின் லுக்கில் இருக்கும் கங்கனா ரனாவத்தின் போட்டோ ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது. எந்தவிதா ப்ராஸ்தடிக் மேக்கப்பும் இல்லாமல், ஸ்பெஷல் எஃபக்ட் இல்லாமல், கங்கனாவின் மன உறுதியே தலைவி படத்தின் இந்த லுக்கிற்கு காரணம் என்று படக்குழுவினர் கூறுகின்றனர். இந்நிலையில் தலைவி படத்தின் முதல் பாடலான 'மழை மழை' என்ற பாடலை சமீபத்தில் படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர்.

தனது அனுமதி கோராமல் எடுக்கப்படும் ‘தலைவி’, ‘ஜெயா’, ‘குயின்’ ஆகியவற்றுக்குத் தடை விதிக்கக்கோரி, ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா உரிமையியல் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை தனி நீதிபதி தள்ளுபடி செய்தார். இந்நிலையில் தீபா தரப்பில் மீண்டும் மேல்முறையீடு செய்யப்பட்டது. இன்று (16.04.2021) இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், தனி நீதிபதி தள்ளுபடி செய்ததை உறுதிசெய்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, வழக்கை தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Thalaivi

court case against thalaivi movie is dismissed தலைவிக்கு எதிராக ஜெ.தீபா வழக்கு முடிவு

People looking for online information on Thalaivi will find this news story useful.