'காஞ்சனா'ல அந்த மிரட்டலான சீன் எப்படி எடுக்குறாங்க பாருங்க....

முகப்பு > சினிமா செய்திகள்

By |

எஸ்எஸ் மியூசிக் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் பூஜா ராமச்சந்திரன் . பின்னர் 'நண்பன்', 'காதலில் சொதப்புவது எப்படி?, 'பீட்சா', 'காஞ்சனா 2' உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்.

இந்நிலையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் 'காஞ்சனா 2' படத்தின் முக்கிய காட்சி உருவான விதம் குறித்து வீடியோவாக பகிர்ந்துள்ளார். அதில் ''காஞ்சனா 2 படம் சில நாட்களுக்கு முன் டிவியில் ஒளிபரப்பினார்கள். நடிகை டாப்ஸியுடன் இந்த படத்தில் மகிழ்ச்சியாக கழிந்தன. இந்த கடினமான சீன் படமாக்கும்போது கடுமையான வெப்பம் நிலவியது. மேலும் கண், காது மூக்கு எல்லாவற்றிலும் மண் புகுந்தது. இந்த காட்சி நியாபகம் இருக்கிறதா ?'' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

பூஜா தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். மேலும் நடிகர் ஜான் குக்கேன் என்பவரை கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளார். மேலும் இவர் தெலுங்கு பிக்பாஸ் சீசன் 2வில் கலந்துகொண்டுள்ளார்.

Entertainment sub editor