இவருக்கு மட்டும் ஒரு வருஷம் லாக்டவுனா ? - பிரபல நடிகர் வெளியிட்ட ரொமாண்டிக் பதிவு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'நண்பன்', 'காதலில் சொதப்புவது எப்படி?' படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை பூஜா. இவர் நடிகர் ஜான் குக்கேன் என்பவரை கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளார். மேலும் இவர் தெலுங்கு பிக்பாஸ் தெலுங்கு சீசன் 2வில் கலந்துகொண்டு பிரபலமானார்.

இவர்களது திருமணம் நடந்து ஒரு வருடம் நிறைவு செய்துள்ள நிலையில் ஜான் கொக்கேன் தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதியுள்ள பதிவில், ''உன்னுடன் 1 வருட லாக்டவுன் கொண்டாட்டம். திருமண நாள் வாழ்த்துகள் பூஜா'' என்று வாழ்த்து தெரிவித்து சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

நடிகை பூஜா ராமச்சந்திரன் நடிக்கவருவதற்கு முன்பு எஸ்எஸ் மியூசிக் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக ரசிகர்களிடையே மிகவும் பிரபலம். மேலும் அவர் பீட்சா, காஞ்சனா 2 படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்.

Entertainment sub editor