www.garudabazaar.com

ஸ்ரீ ராஜராஜ சோழனாக ஜெயம் ரவி.. போர் பின்னணியில் பொன்னியின் செல்வன் படத்தின் புதிய போஸ்டர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

புகழ்பெற்ற மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாக கொண்டு, அதே பெயரில் "பொன்னியின் செல்வன்" படத்தை இரண்டு பாகங்களாக இயக்குனர் மணிரத்னம் இயக்குகிறார்.

Ponniyin Selvan Movie Jayam Ravi as Raja Raja Chozhan Poster

Also Read | இந்த ஜூலை 2வது வாரம் OTT-யில் ரிலீசாகும் சூப்பர் திரைப்படங்கள்! எப்போ? எதுல? முழு தகவல்

லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவங்கள் இணைந்து தயாரித்திருக்கும் இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது. இதில் முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1” 2022 செப்டம்பர் 30 ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்தது.

இந்த PS1 படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின் ஆகியோர் நடிக்கிறார்கள். சமீபத்தில் இப்படத்தின் படத்தின் போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

Ponniyin Selvan Movie Jayam Ravi as Raja Raja Chozhan Poster

சில நாட்களுக்கு முன் பொன்னியின் செல்வன் படத்தில் நடிகர் கார்த்தியின் கேரக்டர் லுக் போஸ்டர் வெளியானது. அதற்கு முன் விக்ரம் கதாபாத்திரத்தின் போஸ்டர் வெளியானது. நேற்று முன்தினம் நடிகை ஐஸ்வர்யா ராயின் கதாபாத்திரத்தின் போஸ்டர் வெளியானது. நேற்று நடிகை த்ரிஷாவின்  'குந்தவை' கதாபாத்திரத்தின் புதிய லுக் போஸ்டர் வெளியானது.

இந்நிலையில் இன்று ஜெயம் ரவியின் கதாபாத்திரத்தின் போஸ்டர் வெளியாகி உள்ளது. அருள்மொழி வர்மன் என்ற உடையார் ஶ்ரீ ராஜராஜசோழதேவர் கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி நடித்துள்ளார். த்ரிஷா & விக்ரமின் தம்பியாக ஜெயம் ரவி நடித்துள்ளார்.

Ponniyin Selvan Movie Jayam Ravi as Raja Raja Chozhan Poster

இப்படத்தில் ஆதித்ய கரிகாலனாக விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், ராஜ ராஜ சோழனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர்.  வந்தியத்தேவன் கார்த்தியின் காதலியாக குந்தவை த்ரிஷா நடிக்கிறார்.

இந்த படத்தின் எடிட்டிங்கை ஸ்ரீகர் பிரசாத் கவனித்து வருகிறார்,  கலை இயக்குனராக தோட்டா தரணி பணிபுரிகிறார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை செய்கிறார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

Also Read | குழந்தையின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பிரியங்கா சோப்ரா.. வைரல் போட்டோ!

தொடர்புடைய இணைப்புகள்

Ponniyin Selvan Movie Jayam Ravi as Raja Raja Chozhan Poster

People looking for online information on Jayam Ravi, Jayam Ravi as Raja Raja Chozhan, Jayam Ravi Character in PS1, Ponniyin Selvan, PS1 will find this news story useful.