www.garudabazaar.com

சினிமாவின் 24 CRAFT தெரிஞ்சவர் அல்லு அர்ஜூன் - 3 மணி நேரம் சந்திப்பு பற்றி இயக்குனர் சிவா பேச்சு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'ஆல வைகுந்த புரம்லூ' (2020) படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமாரின் இயக்கத்தில் வெளி வரவிருக்கும் திரைப்படம் 'புஷ்பா தி ரைஸ் (Pushpa - The Rise)'.

Allu Arjun Pushpa movie press meet dir siva speech

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள 'புஷ்பா' படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ், தனஞ்சய், சுனில், ஹரிஷ் உத்தமன், வென்னேலா கிஷோர் மற்றும் அனசூயா பரத்வாஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசிலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

சுகுமார் இதற்கு முன்பு ராம் சரண் மற்றும் சமந்தா நடிப்பில் இந்திய அளவில் பேசப்பட்ட தெலுங்கில் வெளியான 'ரங்கஸ்தலம்' (2018) என்ற சூப்பர்ஹிட் திரைப்படத்தை இயக்கியுள்ளார். பான்-இந்தியன் திரைப்படமான 'புஷ்பா' இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தெலுங்கு திரைப்படங்களில் ஒன்றாகும். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு  வரும் டிசம்பர் 17 ஆம் நாள் வெளியாக உள்ளது.

Allu Arjun Pushpa movie press meet dir siva speech

கிறிஸ்துமஸ்க்கு ஒரு வாரம் முன்பு இந்த படம் பல இந்திய மொழிகளில் ரிலிசாகிறது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் Seshachalam Hills சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளன. படத்திற்கான தமிழ் வசனங்களை மதன் கார்க்கி எழுதியுள்ளார். பிரபல நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். 

Allu Arjun Pushpa movie press meet dir siva speech

சென்னையில் நடந்த இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு விழாவில், இயக்குனர் சிவா கலந்து கொண்டு படக்குழுவை வாழ்த்தினார். அதில் சில ஆண்டுகளுக்கு முன் அல்லு அர்ஜூனை சந்தித்து 3 மணி நேரம் உரையாடியதாகவும் அப்போது தான் அல்லு அர்ஜூன் சினிமா பற்றி அனைத்து கிராப்டும் அறிந்த நடிகர் என்று உணர்ந்ததாக குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த படம் அல்லு அர்ஜூனுக்கு தமிழில் பெரிய ஹிட்டாகும் என்றும் கூறியுள்ளார். முழு வீடியோவும் கீழே உள்ளது.

 

சினிமாவின் 24 CRAFT தெரிஞ்சவர் அல்லு அர்ஜூன் - 3 மணி நேரம் சந்திப்பு பற்றி இயக்குனர் சிவா பேச்சு! வீடியோ

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Allu Arjun Pushpa movie press meet dir siva speech

People looking for online information on Allu Arjun, Devi sri prasad, Pushpa, Pushpa The Rise, Siruthai Siva, Siva will find this news story useful.