சூர்யாவின் ஜெய்பீம்! இயக்குனர் ஞானவேலுவின் கண்ணத்தை பிடித்து பாராட்டிய தோழர் நல்லக்கண்ணு!
முகப்பு > சினிமா செய்திகள்தமிழ் சினிமா உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள ஜெய்பீம் திரைப்படத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு பார்த்தார். அவருடன் நடிகர் சூர்யா, சூர்யாவின் தந்தை சிவக்குமார், இயக்குநர் த.செ.ஞானவேலு, 2D நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் ஆகியோரும் படத்தைப் பார்த்தனர்.
முன்னதாக படத்தை தொலைக்காட்சியில் பார்த்த நல்லக்கண்ணு, திரையில் காண விருப்பம் தெரிவித்திருந்தார். அதற்கேற்ப படத்தை என் எப் டி சியில் திரையிட ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, நேற்று வியாழக்கிழமை இரவு படத்தைத் திரையில் கண்டு ரசித்தார். படத்தைப் பார்த்துவிட்டு நல்லக்கண்ணு அவர்கள், நடிகர் சூர்யாவையும், படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேலுவையும் வெகுவாகப் பாராட்டினார். நடிகர் சூர்யாவின் கன்னத்தில் செல்லமாக வருடிக் கொடுத்து தனது பாராட்டை நல்லக்கண்ணு பதிவு செய்தார்.
தமிழகத்தில் 1990களில் நடந்த பல்வேறு உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு காண்போரின் சிந்தையைத் தூண்டும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம் தான் 'ஜெய் பீம்'. நீதிபதி சந்துருவின் வழக்காடு பயணத்தில் இருந்து நிறையவே ஈர்க்கப்பட்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஒரு வழக்கறிஞராக, நீதிபதியாக நீதியரசர் சந்துரு தனது கடமையைச் செய்ய, நீதியை நிலைநாட்டு தன் எல்லைகளைத் தாண்டியும் எப்படிப் போராடினர் என்பதற்கான சாட்சி 'ஜெய் பீம்'.
இத்திரைப்படத்தை த.செ.ஞானவேல் எழுதி, இயக்கியுள்ளார். படத்தில் சூர்யாவுடன், பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், ரஜிஷா விஜயன், மணிகண்டன், லிஜோ மோல் ஜோஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு ஷான் ரால்டன் இசையமைத்துள்ளார். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஃபிலோமின்ராஜ் எடிட்டராகவும், கலை இயக்குநராக கதிரும் பணியாற்றியுள்ளனர்.
நவம்பர் 2 ஆம் உலகம் முழுவதும் 240 நாடுகளில் பல்வேறு பிராந்தியங்களில் வெளியான 'ஜெய் பீம்' திரைப்படம் பரவலாக நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி பல்வேறு அரசியல் கட்சியினரும் படத்திற்கு பாராட்டும், படக்குழுவினருக்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளனர். அந்த வரிசையில், தற்போது ஜெய்பீம் திரைப்படத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு பார்த்துவிட்டு நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் த.செ.ஞானவேலுவையும் பாராட்டியுள்ளார். தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவரின் பாராட்டு, நடிகர் சூர்யாவையும் ஜெய்பீம் படக்குழுவினரையும் மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Suriya Jaibhim Controversy .. Aavudaiappan Vs Rangaraj Pandey
- Actor Suriya Jyothika Jai Bhim Controversy Again Started
- My Responsibility Not Suriya Jai Bhim Director Breaks Out
- Suriya Asked Sorry In Soorarai Pottru Shoot Heartfelt Viral Post
- Yuvan Did Copy Paste In Mankatha Says SJ Suriya At Maanaadu Meet
- SJ Suriya Mass Speech About Simbu In Maanaadu Press Meet Video
- Parthiban Celebrates Birthday With Jai Bhim Real Justice Chandru
- Wishes From Another Hero Suriya Viral Tweet Jaibhim Movie
- Kavignar Thamarai About Suriya Starring Jai Bhim Controversy
- This Love For #Jaibhim Is Overwhelming - Says Suriya
- Actor Sathyaraj Supports Suriya Regarding Jaibhim Issue
- Suriya Fixed Deposit For Jai Bhim Real Senkeni Parvathi
தொடர்புடைய இணைப்புகள்
- 'கல்வி கண் திறந்த Real Hero சூர்யா' அகரத்தால் சிகரம் தொட்ட Dr.கிருஷ்ணவேணி..! நெகிழ்ச்சியான பின்னணி
- ''சூர்யாவை Target செய்வது ஏன்? 5 கோடி வந்தா பார்வதிக்குதான்..!"- பாமக பாலு பரபரப்பு பேட்டி |Jai Bhim
- Jaibhim Director TJ.Gnanavel Throwback Interview! ❤️🔥
- Jai Bhim-க்கு பேசுற நீங்க திரௌபதி வந்தப்போ குரல் கொடுத்தீர்களா?- Dir. கௌதமன் காரசார பேட்டி | Suriya
- Match-ஐ நிறுத்திய Mahendran😲Sriram BOWLING-ல் நடந்த சர்ச்சை🙄UMPIRE எடுத்த அதிரடி முடிவு! Full Match
- விஸ்வரூபம் எடுக்கும் Jai Bhim சர்ச்சை... Suriya, Jyothika மீது வழக்கு பதிவு
- "சூர்யாவுக்கு சம்பந்தமில்லை..! தூண்டி விடுபவர்கள் இவர்கள்தான்"பின்னணியை உடைத்த இயக்குனர்
- Puneeth சமாதியில் YOGIBABU Emotional🥺
- "நாங்க தொட்டா ஒட்டிக்குமா..?" - இன்றும் தொடரும் அவலநிலை | JAI BHIM
- "என் பிரதியில் அக்கினிக் கலசம் இல்லை..என் ஜாதிக்கு எதிராக என்னையே திருப்பிவிட்டீர்"
- "முழு பொறுப்பு என்னுடையது.. சூர்யா அல்ல" வருத்தம் தெரிவித்த ஜெய் பீம் இயக்குனர்
- "காட்டுக்குள் தவம்! பெண்கள் பார்க்கக் கூடாதுன்னு மறைஞ்சிருப்பாங்க" பூதநாச்சி அம்மன் கோயில் Visit