Jango Others
www.garudabazaar.com

“இன்னொரு ஹீரோ கிட்டேருந்து வாழ்த்து..”.. வெற்றிமாறன் பட ஹீரோவின் ட்வீட்.. சூர்யா நெகிழ்ச்சி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சூர்யா தயாரித்து நடித்துள்ள ஜெய்பீம் திரைப்படம், கடந்த நவம்பர் 2-ஆம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோ ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியானது.

wishes from another hero Suriya viral tweet jaibhim movie

கதைப்படி, பழங்குடி இருளர் இன மக்களின் மீதான காவல்துறையினரின் மனித உரிமை அத்துமீறல் சித்தரிக்கப்பட்டு படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் பழங்குடி இருளர் இன தம்பதியாக வரும் மணிகண்டன் மற்றும் லிஜோ மோல் ஜோஸ் நடித்துள்ளனர். பாதிக்கப்படும் இவர்களுக்காக சட்டவழிப்போராட்டம் நடத்தும் வழக்கறிஞர் சந்துருவாக சூர்யா நடித்துள்ளார். 

இந்நிலையில், இப்படம் குறித்து நடிகர் சூரி குறிப்பிடும்போது, “இரவு தூங்குறதுக்கு முன் கொஞ்ச நேரம் பார்த்துட்டு, மிச்சத்தை மறுநாள் பார்த்துக்கலாம்ன்னு நெனச்சுதான் படம் பார்க்க ஆரம்பிச்சேன். படம் முடிஞ்சும் எழுந்திருக்க முடியலை, அப்படியே உறைந்து உட்கார்ந்து இருந்தேன் ஜெய்பீம் படமல்ல பாடம். விருது கிடைத்தால் அது விருது க்கு பெருமை. #JaiBhim” என குறிப்பிட்டுள்ளார்.

இதனை தற்போது ரீட்வீட் செய்துள்ள நடிகர் சூர்யா, தமது ட்வீட்டில், “இன்னொரு ஹீரோ கிட்டேருந்து வாழ்த்து வாங்குறது சந்தோஷமாக இருக்கிறது” என்று தமது ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் சூரி வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதியுடன் இணைந்து ‘விடுதலை’ படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இப்படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். 

இதேபோல் சூர்யா நடிக்கும் ‘வாடிவாசல்’ திரைப்படத்தை இயக்குநர் வெற்றிமாறன் அடுத்து இயக்குகிறார். இதனிடையே ஜெய்பீம் படம் மற்றும் சூர்யாவுக்கு ஆதரவளிக்கும் வகையில் வெற்றிமாறன் தமது ட்விட்டரில், “சமூக அவல நிலை, மாறுவதை விரும்பாதவர்கள் மத்தியில், இந்தப் படங்கள் கோபத்தை ஏற்படுத்துவது இயற்கையே! #WeStand With Suriya.

ஒரு சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளையும், அநீதிகளையும் கேள்விக்குள்ளாக்கும் திரைப்படங்களும், சமூக நீதிக்கான ஆயுதங்கள் ஆகும். #ஜெய்பீம் படக்குழுவினர்கள் அத்தனை பேருக்கும் நாங்கள் துணை நிற்கிறோம்!” என்று பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

wishes from another hero Suriya viral tweet jaibhim movie

People looking for online information on Jai Bhim, Suriya, Vaadivaasal, Vetrimaaran will find this news story useful.