’சைக்கோ’ படத்தின் கொடூர சீனில் ’மயக்கம் போட்டு விழுந்துட்டேன்…’! - ராஜ்குமார் பிச்சுமணி
முகப்பு > சினிமா செய்திகள்மிஷ்கின் சமீபத்தில் இயக்கிய 'சைக்கோ' படம் கொடூரமாக கொலை செய்யும் ஒரு சீரியல் கில்லரை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இதில் உதயநிதி, அதிதி ராவ், நித்யா மேனன், சிங்கம் புலி, ராஜ்குமார் பிச்சுமணி ஆகியோர் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்திருந்தார்.
புத்தர்-அங்குலிமாலா கதையின் கருவை எடுத்துக்கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் இந்த கதையில் Psychopath கதாப்பாத்திரத்தில் ராஜ்குமார் பிச்சுமணி நடித்திருந்தார். இவர் 5 ஆண்டுகளாக மிஷ்கினுடன் உதவி இயக்குநராக இருந்து வருகிறார்.
பிசாசு படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்த அவர் ‘சைக்கோ’வில் கொடுத்திருக்கும் பெர்ஃபார்மென்ஸ் அனைவராலும் வியந்து பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் இவர் படத்தில் நிர்வாணமாக நடித்த காட்சி, மிஷ்கினுடன் உதவி இயக்குநராக இருந்த அனுபவம் மற்றும் மிஷ்கின் கற்றுத்தந்த சினிமா குறித்து பகிர்ந்தும் கொள்கிறார்.
’சைக்கோ’ படத்தின் கொடூர சீனில் ’மயக்கம் போட்டு விழுந்துட்டேன்…’! - ராஜ்குமார் பிச்சுமணி வீடியோ