வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் 'மாநாடு' படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் ( மார்ச் 11) ஹைதராபாத்தில் நடைபெறவிருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இது தொடர்பாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி, கருணாகரன், மனோஜ் பாரதிராஜா உள்ளிட்டோருடன் எடுத்துக்கொண்ட ஃபோட்டோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
![மிஷ்கின் இயக்கத்தில் சிம்பு, வடிவேலு இணைவது குறித்த விவரம் | Mysskin next project may be with STR and Vadivelu details here மிஷ்கின் இயக்கத்தில் சிம்பு, வடிவேலு இணைவது குறித்த விவரம் | Mysskin next project may be with STR and Vadivelu details here](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/mysskin-next-project-may-be-with-str-and-vadivelu-details-here-photos-pictures-stills.jpg)
இந்நிலையில் நடிகர் சிம்பு அடுத்து மிஷ்கின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாகவும், இந்த படத்தில் நடிகர் வடிவேலுவும் முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் இயக்குநர் மிஷ்கின், நடிகர் சிம்புவிடம் கதை சொல்லியுள்ளதாகவும் ஆனால் இது தொடக்கநிலையில் தான் இருக்கிறது எனவும் எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. மேலும் வடிவேலு நடிப்பது பற்றி வெறும் விவாதம் மட்டுமே நடைபெற்றுள்ளதாகவும் இன்னும் எதுவும் உறுதியாகவில்லை எனவும் அந்த தகவலில் தெரிவிக்கப்ப்டடுள்ளது.
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளியான 'சைக்கோ' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த படத்துக்கு இளையராஜாவின் இசையும் பெரும் பலமாக அமைந்திருந்தது.