"அந்த ROLE சிவகுமார் Sir-க்காக எழுதுனது".. மனதில் இருந்த கதாபாத்திரம்.. மிஷ்கின் ஷேரிங்ஸ்!!
முகப்பு > சினிமா செய்திகள்தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு சிறந்த இடத்தை இயக்குனராக உருவாக்கி கொண்டவர் மிஷ்கின். சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான மிஷ்கின், அஞ்சாதே, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, சைக்கோ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களையும் இயக்கி உள்ளார்.
Images are subject to © copyright to their respective owners
ஏராளமான படங்களில் பாடல்களையும் பாடி உள்ள மிஷ்கின், நிறைய படங்களில் நடிக்கவும் செய்துள்ளார். அவரது இயக்கத்தில் முன்பு நடித்து வந்த மிஷ்கின், தொடர்ந்து தற்போது வேறு இயக்குனரின் படங்களிலும் நடித்து வருகிறார்.
அந்த வகையில், நடிகர் விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கும் "Leo" என்ற திரைப்படத்திலும், சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் திரைப்படத்திலும் மிஷ்கின் நடித்து வருகிறார். தனக்கென ஒரு ஸ்டைலில் திரைப்படங்கள் இயக்குவது மூலம் பலரின் பேவரைட் இயக்குனராகவும் வலம் வருகிறார் மிஷ்கின்.
இந்த நிலையில், Behindwoods சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் இயக்குனர் மிஷ்கின் கலந்துகொண்டிருந்தார். இதில் தனது திரைப்படங்கள் குறித்து நிறைய தகவல்களை மிஷ்கின் பகிர்ந்து கொண்டார்.
பிசாசு படத்தில் ராதாரவி நடித்த கதாபாத்திரத்தில் வேறொரு நடிகரை நடிக்க வைக்க முயற்சி செய்தது குறித்து பேசி இருந்த மிஷ்கின், "இந்த கதாபாத்திரம் வந்து நான் சிவகுமார் சாருக்கு தான் எழுதினேன். அதை நான் பாலா (இயக்குனர் மற்றும் பிசாசு படத்தின் தயாரிப்பாளர்) கிட்ட சொன்னேன். அவரு நடிக்கமாட்டேன்னு சொல்லிட்டாருன்னு பாலா சொன்னார்.
சிவகுமார் அய்யாவை பாத்தாலே நல்லவரா இருப்பாரு. கார்த்தி, சூர்யாக்கு மட்டுமில்ல, நம்ம எல்லாருக்கும் அவரு அப்பா. அவ்ளோ தங்கமான மனுஷன். ரொம்ப இளகிய மனம் படைச்சவரு. வாழ்க்கைய எப்படி வாழனும்ன்னு வாழ்ந்துட்டு இருக்குறவரு. தண்ணி, சிகரெட் எதுவுமில்லை. நான் ரொம்ப குடிக்குறேன்னு என்ன திட்டவும் செஞ்சுருக்காரு.
அவருக்கு தான் அதை எழுதினேன். அவரு முடியாதுன்னு சொன்னதும் யாரை அந்த ரோல்ல போடுறதுன்னே தெரியல. அப்ப ராதாரவி பெயரை சொன்னதும் வில்லன் மாதிரி நடிக்குறவரு இந்த கேரக்டருக்கு செட் ஆகுமான்னு பசங்க கேட்டாங்க.
Images are subject to © copyright to their respective owners
இந்த படத்துல அவரு குழந்தை செத்து போச்சுன்னு ஒரு லாங் ஷாட்ல நடந்து வருவாரு. ராதாரவியான்னு ஆடியன்ஸ் யோசிக்கணும்ங்குற மாதிரி இருக்கும். அடுத்தடுத்து ஷாட்ல தான் அவருக்கு க்ளோஸ்ல போனேன்" என தெரிவித்து, ஹீரோவின் வீட்டிற்குள் மகளை தேடி கண்ணீர் விட்டு அழைப்பது போன்ற காட்சிகளில் ராதாரவி நடித்திருந்தது குறித்தும் மிஷ்கின் பேசி இருந்தார்.
"அந்த ROLE சிவகுமார் SIR-க்காக எழுதுனது".. மனதில் இருந்த கதாபாத்திரம்.. மிஷ்கின் ஷேரிங்ஸ்!! வீடியோ
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Mysskin Break About His Best Acting Scene In Movie Exclusive
- Actor Mysskin About Vijay Thalapathy 67 Movie And Lokesh Kanagaraj
- Actor Sivakumar Speech About His Father In Uzhavan Viruthugal
- Actor Sivakumar Reveals His Childhood Memories
- Thalapathy 67 Vijay & Mysskin Combination Shoot Update
- Mysskin About Thalapathy 67 Movie Shooting Lokesh Kanagaraj
- Actor Saravanan And Sujatha Sivakumar Enters Into BB House
- Mysskin Explains About Bar Songs In His Films Exclusive
- Mysskin Told Action Story To Simbu Exclusive Behindwoods
- Mysskin About Directing Thalapathy Vijay Exclusive
- Mysskin About Lakshmi Ramakrishnan In Fans Festival
- Mysskin Overwhelmed By Thirumoorthy Song In Fans Festival
தொடர்புடைய இணைப்புகள்
- "CAMERA ON பண்ணிட்டு எல்லாரும் வெளிய போயிடுங்க..." - Mysskin Decodes The Best Scene
- "நான் பரதேசியா போகவேண்டியது, கல்யாணம் பண்ணிக்கிற ஆசையெல்லாம் கிடையாது"... SIvakumar Speech
- "MGR-ஐ ஏன் M. R. ராதா சுட்டாரு தெரியுமா..?" ரகசியங்கள் உடைக்கும் மகன் ராதா ரவி பேட்டி
- "கரண்ட் பில் கட்ட காசு இல்லைன்னு கெஞ்சுவேன்" நடிகர் ராதா ரவி Emotional பேட்டி
- "விஜயின் வாரிசுக்கு எதிரா RED GIANT பிரச்சனை பண்ணுறாங்களா..?" ராதா ரவி பரபரப்பு பேட்டி
- Simbu, நீங்க Climax-ல 100 பேர அடிக்கணும்! எப்படி இருக்கு? Mysskin சொன்ன கதை கேட்டு மிரண்டுட்டாரு STR
- என் கண்ணாடி, Watch வெச்சிக்கோ Thirumoorthy, செம பாட்டு! நெகிழ்ந்த MYSSKIN | Beautiful Singing Video
- MYSSKIN Fans Festival PROMO | ...
- Nandha 2 Plan பண்ணலாமா Suriya 🔥 சின்ன குழந்தை மாதிரி கொஞ்சி கொஞ்சி பேசிய Laila
- "எவண்டா உன்ன பாப்கார்ன் வாங்க சொன்னது!"மேடையில் கொந்தளித்த ராதாரவி
- 🔴 "Drugs நம்ம வாசல் வர வந்திருச்சு" எச்சரித்து Emotional ஆன Karthi
- Kuruthi Aattam Celebrity Review | Atharva, Priya Bhavani Shankar, Radhika, Sri Ganesh | Movie Review