www.garudabazaar.com

50-க்கும் மேற்பட்ட பிரபலங்கள்.. இந்த ஒரு விஷயத்துக்காக இணைஞ்சுருக்காங்க.! - காரணம் சூர்யா.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சூர்யாவின் பிறந்தநாளுக்காக அவரது ஸ்பெஷல் காமன் டிபி வெளியாகியுள்ளது. 

சூர்யாவின் பிறந்தநாளுக்கு வெளியான காமன் டிபி போஸ்டர் | more than 50 celebrities shares suriya's common dp for his birthday

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் சூர்யா. இவர் தற்போது சுதா கொங்கரா இயக்கியுள்ள சூரரைப் போற்று திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் அபர்னா பாலமுரளி, மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். சம்மருக்கு வெளியாகவிருந்த சூரரைப் போற்று, லாக்டவுன் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் நடிகர் சூர்யா வருகிற 23-ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையடுத்து அவரது பிறந்தநாளுக்கான ஸ்பெஷல் காமன் டிபி தற்போது வெளியாகியுள்ளது. இயக்குநர்கள் சமுத்திரக்கனி, வெங்கட் பிரபு, பாண்டிராஜ், லோகேஷ் கனகராஜ், நடிகர்கள் சசிகுமார், ராணா, நடிகை காஜல் அகர்வால் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட திரைத்துறை பிரபலங்கள் இந்த போஸ்டரை வெளியிட்டு, சூர்யாவுக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இதையடுத்து சூர்யாவின் ரசிகர்கள் ட்விட்டரில் அவரை வாழ்த்தி ட்ரெண்ட் அடித்து வருகின்றனர். மேலும் சூர்யாவின் பிறந்தநாளில், சூரரைப் போற்று டீமிடம் இருந்து ஒரு சர்ப்ரைஸ் பரிசு வரும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

 

 

சூர்யாவின் பிறந்தநாளுக்கு வெளியான காமன் டிபி போஸ்டர் | more than 50 celebrities shares suriya's common dp for his birthday

People looking for online information on Common DP, Soorarai Pottru, Suriya, Suriya birthday will find this news story useful.