மிர்ச்சி சிவா தனது ட்விட்டர் பக்கத்தில், சிறுவன் போட்ட சூப்பர் ஆட்டத்தின் வீடியோவை பாராட்டியுள்ளார்.

சென்னை 28 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் மிர்ச்சி சிவா. இவரது காமெடியான நடிப்பு ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்தது. மேலும் இவர் நடித்த தமிழ்ப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. இவர் நடிப்பில் உருவாகியுள்ள சுமோ, பார்ட்டி உள்ளிட்ட படங்கள் ரிலீஸுக்காக காத்திருக்கிறது.
இந்நிலையில் மிர்ச்சி சிவா, தமிழ்ப்படத்தில் நடனமாடிய காட்சியை போல, சிறுவன் ஒருவன் ஆடும் வீடியோ இணையத்தில் வெளியானது. சிவாவை போலவே பாவனைகள் செய்து கொண்டு ஆடும் அச்சிறுவனின் ஆட்டம் நெட்டிசன்களை வெகுவாக கவர்ந்தது. இதையடுத்து அந்த வீடியோவை பார்த்த சிவா, ''என்னை போல ஒரு நல்ல டான்ஸராக வரும் திறமை இவனுக்கு இருக்கிறது'' என பதிவிட்டுள்ளார்.
He’s Got all the great qualities to become a great dancer like me thanks for the video🙏god bless him⭐️⭐️⭐️ https://t.co/aZaPM2I3se
— Shiva (@actorshiva) May 6, 2020