ஆஹா கவிதை..! - பிகில் Audio Launch-ல் மிர்ச்சி சிவாவுக்கு அருவியா கொட்டிய கவிதைகள் இதோ!
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Sep 19, 2019 07:14 PM
நடிகர் விஜய் நடித்துள்ள ‘பிகில்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரசிகனுக்கும், தலைவனுக்குமான வித்தியாசத்தை நிகழ்ச்சி தொகுப்பாளரான நடிகர் மிர்ச்சி சிவா தனது கவிதை திறமையால் வெளிப்படுத்தினார்.
![Bigil Audio Launch Mirchi Shiva poetry to Thalapathy Vijay fans Bigil Audio Launch Mirchi Shiva poetry to Thalapathy Vijay fans](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/bigil-audio-launch-mirchi-shiva-poetry-to-thalapathy-vijay-fans-photos-pictures-stills.jpg)
ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாகியுள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும், கதிர், யோகிபாபு, விவேக், ரெபா மோனிகா, இந்துஜா, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், சவுந்தரராஜா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
மகளிர் கால்பந்து விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது, தாம்பரத்தில் உள்ள சாய் ராம் கல்லூரியில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த இசை வெளியீட்டு விழா வரும் ஞாயிற்றுக் கிழமை மாலை 6 மணிக்கு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.
இந்த இசை வெளியீட்டு விழாவை நடிகர் மிர்ச்சி சிவா மற்றும் விஜே ரம்யா ஆகியோர் தொகுத்து வழங்கி வருகின்றனர். இவர்களது உரையாடலில், நாம் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க தேவையில்லை, அவர்(விஜய்)எழுந்தாலே, கை காட்டினாலே கை தட்டுறாங்க என்ற அவர், தளபதி ரசிகர்களிடம் எங்கிருந்து உங்களுக்கு இந்த எனர்ஜி வருகிறது என்றார்.
இதையடுத்து, சென்னை 28 திரைப்படத்தில் வெளிப்படுத்திய தனது கவிதை திறனை மீண்டும் ஒருமுறை சிவா நியாபகப்படுத்தியுள்ளார். பிகில் குறித்து அவர் சொன்ன கவிதை தளபதி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. “ஒரு ரசிகன் ஒரு தலைவனுக்காக அடிச்சா அது விசிலு, அதே ஒரு தலைவன் ரசிகனுக்காக அடிச்சா அது பிகிலு” என்றார். மேலும், எப்படி எல்லாம் ஃபுட்பால் விளையாடனும்னு தளபதி பிகில் சொல்லி கொடுத்திருக்காரு.. எப்படி எல்லாம் கிரிக்கெட் விளையாடக் கூடாதுன்னு நாங்க சொல்லி கொடுத்தோம் என கூறி அரங்கை கலகலக்கச் செய்தார்.
பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின் சுவாரஸ்ய நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இணைந்திருங்கள்.