www.garudabazaar.com

மாஸ்டர் படத்தில் விஜய் கேரக்டர் இப்படி தான் இருக்கும்... போட்டு உடைத்த பிரபல நடிகர்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் தற்போது நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏப்ரம் மாதம் வெளியாகவிருந்த மாஸ்டர் திரைப்படம் ஊரடங்கு காரணமாக தள்ளி வைக்கப்பட்டது.

Master vijay character update by popular actor மாஸ்டர் படத்தில் விஜய் கேரக்டர்

இந்நிலையில் மாஸ்டர் திரைப்படம் குறித்து பிரத்யேக தகவல் தற்போது தெரிய வந்துள்ளது. இத்திரைப்படம் வரும் 2021-ஆம் வருடம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என கூறப்படுகிறது. பொங்கல் திருநாளை ஒட்டி, நேரடியாக தியேட்டர்களில் மாஸ்டர் 10-ஆம் தேதி அன்று வெளியாகும் என விவரம் அறிந்த கோலிவுட் வாசிகள் தெரிவிக்கின்றனர். அதுமட்டுமின்றி., ரசிகர்களுக்கு கூடுதல் சந்தோஷமாக, மாஸ்டர் படக்குழு படத்தின் டீசரை சமீபத்தில் வெளியிட்டுள்ளனர். மரண மாஸாக இருக்கும் டீசர் யூடியூபில் சாதனை படைத்து வருகிறது.

இந்நிலையில் நடிகர் சுனில் ரெட்டி(நடிகர் வைபவ்வின் சகோதரர்) அளித்திருக்கும் பேட்டியில் மாஸ்டர் படம் பற்றின அப்டேட்டை அவர் ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார். தளபதி விஜய் எப்படிப்பட்ட JD-யாக மாஸ்டர் படத்தில் இருப்பார் என்ற கேள்விக்கு, "ஒன்று சொல்கிறேன் மாஸ்டரில் வேற லெவல் மாஸான அவரது கதாபாத்திரம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய டிரீட் ஆக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. நான் இன்னும் முழு கதையும் கேட்கவில்லை. ஆனால் மாஸ்டர் எப்படி இருக்கப்போகிறது என்பதை டீசரை பார்த்தவுடன் தெரிந்து விட்டது" என்று கூறியுள்ளார்.

மாஸ்டர் படத்தில் விஜய் கேரக்டர் இப்படி தான் இருக்கும்... போட்டு உடைத்த பிரபல நடிகர்..! வீடியோ

Tags : Master, Vijay

தொடர்புடைய இணைப்புகள்

Master vijay character update by popular actor மாஸ்டர் படத்தில் விஜய் கேரக்டர்

People looking for online information on Master, Vijay will find this news story useful.