www.garudabazaar.com

விஜய்யை சந்திக்க ரெடியாகும் லோகேஷ் கனகராஜ்.! - எதற்காக இந்த மீட்டிங் தெரியுமா.?!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய்யை சந்திக்கவிருப்பது குறித்து தகவல் தெரிய வந்துள்ளது. 

விஜய்யை சந்திக்க போகும் லோகேஷ் கனகராஜ் | Master Director Lokesh Kanagaraj to meet Vijay for this purpose

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக கலக்கி வருபவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், ஷாந்தனு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள், ரசிகர்களின் அமோக வரவேற்புடன் ஹிட் அடித்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

விஜய்யை சந்திக்க போகும் லோகேஷ் கனகராஜ் | Master Director Lokesh Kanagaraj to meet Vijay for this purpose

இந்நிலையில் மாஸ்டர் படத்தின் அடுத்தக்கட்டமாக நடிகர் விஜய்யை சந்திக்கவுள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். தற்போது தயாராகியுள்ள மாஸ்டர் படத்தின் Final Edit-ஐ விஜய்யிடம் காட்டுவதற்காக, இந்த சந்திப்பு நடக்கவுள்ளதாம். இந்த ஆகஸ்ட மாதத்திலேயே இந்த சந்திப்பு நடக்கலாம் என்று சொல்கிறார்கள் விவரம் அறிந்த கோலிவுட்வாசிகள். இதையடுத்து தியேட்டர்கள் திறக்கப்பட்டு, நிலைமை சாதாரணமான பின்னர் மாஸ்டர் வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

 

 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

விஜய்யை சந்திக்க போகும் லோகேஷ் கனகராஜ் | Master Director Lokesh Kanagaraj to meet Vijay for this purpose

People looking for online information on Lokesh Kanagaraj, Master, Vijay will find this news story useful.