மணிரத்னத்தின் ‘வானம் கொட்டட்டும்’ படத்தில் இருந்து உருக்கமான ஸ்நீக் பீக்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்துள்ள இப்படத்தில் ஹீரோவாக விக்ரம் பிரபு நடித்துள்ளார். மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் சரத்குமார், ராதிகா சரத்குமார், ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபஸ்டியன், நந்தா, சாந்தனு, பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Mani Ratnam Radhika Sarathkumar Vaanam Kottatum sneak peek

இயக்குநர் மணிரத்னம் கதை எழுதி அவரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய இயக்குநர் தனா இயக்கியுள்ளார். இந்த பட த்துக்காக  சித் ஸ்ரீராம் இசையமைத்த பாடல்கல் ஏற்கெனவே வெளியாகி வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படத்தின் முதல் ஸ்நீக் பீக் வெளியாகி உள்ளது.

கொலை குற்றத்திற்காக நெடுநாட்கள் சிறைவாசம் அனுபவிக்கும் ஒருவருக்கு மனைவி கடிதத்தின் ஊடாக தன் பிள்ளைகள் பற்றி தெரிவிப்பது போல் இந்த காட்சி  உருக்கமாக அமைந்துள்ளது. இந்த படம் வரும் பிப்ரவனி  7ம் தேதி ரிலீசாக உள்ளது.

மணிரத்னத்தின் ‘வானம் கொட்டட்டும்’ படத்தில் இருந்து உருக்கமான ஸ்நீக் பீக்! வீடியோ

Entertainment sub editor