மகேஷ் பாபுவின் ‘சரிலேரு நீக்கெவரு’ டிரைலர் இதோ!
முகப்பு > சினிமா செய்திகள்By Aswin | Jan 05, 2020 11:09 PM
தெலுங்கில் மகேஷ்பாபு நடித்து வெளியாகவிருக்கும் படம் ‘சரிலேரு நீக்கெவரு’. இப்படத்தில் இவருடன் கீதா கோவிந்தம் புகழ் ரஷ்மிகா மந்தணா நாயகியாக நடிக்கிறார்.

அணில் ரவிபுடி இயக்கும் இப்படத்தில் நட்சத்திரங்கள் விஜய் சாந்தி, பிரகாஷ்ராஜ், பாரதி, சத்யதேவ், நரேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இப்படத்துக்கு ரத்னவேல் ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 11ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ஆக்ஷன், காமெடி, ரொமான்ஸ் அனைத்து அம்சங்களையும் கொண்டிருக்கும் இத்திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மகேஷ் பாபுவின் ‘சரிலேரு நீக்கெவரு’ டிரைலர் இதோ! வீடியோ
Tags : Mahesh Babu, Rashmika Mandanna