மகேஷ் பாபு - கீர்த்தி சுரேஷ் நடிக்கும் மாஸான ஆக்சன் படம்.. சென்சார் போர்டு கொடுத்த சான்றிதழ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தெலுங்கில் ராஷ்மிகா,  விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளிவந்த 'கீதா கோவிந்தம்' படத்தை தொடர்ந்து `சர்காரு வாரி பாட்டா' படத்தை இயக்குனர் பரசுராம் இயக்குகிறார்.

Mahesh Babu Keerthy suresh Sarkaru Vaari Paata Movie Censored U/A

Also Read | காதலருடன் LATEST புகைப்படத்தை பகிர்ந்த நடிகை பிரியா பவானி சங்கர்! கூட யாரெல்லாம் இருக்காங்க?

இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ், 14 ரீல்ஸ் பிளஸ் மற்றும் மகேஷ்பாபு என்டர்டெய்ன்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இதில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். 'சர்காரு வாரி பாட்டா' படம் வங்கி மோசடியை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருவதாக தெலுங்கு சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சென்ற வருடம் இந்தப் படத்துக்கான மோஷன் போஸ்டர் ரிலீஸ் செய்யப்பட்டது.

Mahesh Babu Keerthy suresh Sarkaru Vaari Paata Movie Censored U/A

சென்ற ஆண்டு ஜூலை 31ம் தேதி இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் ரிலீஸ் செய்யப்பட்டது. பின் மகேஷ்பாபு பிறந்தநாளை முன்னிட்டு டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. சிங்கிள் பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷின் கதாபாத்திரத்தின் பெயர் கலாவதி என சிங்கிள் பாடல் மூலம் தெரிய வந்தது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லரும் வெளியாகி உள்ளது.

Mahesh Babu Keerthy suresh Sarkaru Vaari Paata Movie Censored U/A

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். மதி ஒளிப்பதிவு செய்கிறார். மார்த்தாண்ட கே வெங்கடேஷ் எடிட்டராகவும், ஏஎஸ் பிரகாஷ் கலை இயக்குநராகவும் பணிபுரிகின்றனர்.  2022 மே 12-ம் தேதி இந்த படம் ரிலீசாக உள்ளது. இந்நிலையில் இந்த படம் சென்சார் போர்டு மூலம் சென்சார் செய்யப்பட்டு U/A சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. மேலும் இந்த  படம் 2 மணி நேரம் 43 நிமிடங்கள் ஓடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Mahesh Babu Keerthy suresh Sarkaru Vaari Paata Movie Censored U/A

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

மகேஷ் பாபு - கீர்த்தி சுரேஷ் நடிக்கும் மாஸான ஆக்சன் படம்.. சென்சார் போர்டு கொடுத்த சான்றிதழ்! வீடியோ

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Mahesh Babu Keerthy suresh Sarkaru Vaari Paata Movie Censored U/A

People looking for online information on Keerthy Suresh, Mahesh Babu, Sarkaru Vaari Paata Movie, Sarkaru Vaari Paata Movie updates will find this news story useful.