RRR Others USA
www.garudabazaar.com

மாமன்னன் படத்தின் அடுத்த அப்டேட்… தெறி போஸ்டரை வெளியிட்ட படக்குழு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மாமன்னன் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளதாக படக்குழு அறிவித்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர்.

Maamannan movie crew finished first schedule shooting

விட்டுட்டு போயிட்டேனாம்... அதான் இவ்ளோ ட்ராமா” வரலட்சுமி பகிர்ந்த cute வீடியோ!

மாமன்னன் கூட்டணி உருவான விதம்…

மாரி செல்வராஜின் கர்ணன் படத்தை பார்த்த உதயநிதி ஸ்டாலின் அவரை நேரில் சந்தித்துப் பாராட்டி பேசினார். அப்போது இருவரும் இணைந்து ஒரு படத்தை உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தை நடந்துள்ளது. அதை உறுதிப்படுத்தும் வகையில் சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் மாரிசெல்வராஜ் கூட்டணியில் உருவாகும் மாமன்னன் படத்தின் அறிவிப்பு வெளியானது. இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெய்ண்ட்ஸ் மூவிஸ் நிறுவனமே தயாரிக்கிறது. இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன், பஹத் பாசில், வடிவேலு மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோரும் நடிப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

Maamannan movie crew finished first schedule shooting

மாமன்னன் படத்தில் முன்னணிக் கலைஞர்கள்…

இந்த படத்தின் அறிவிப்பு போஸ்டரில் வடிவேலுவுக்கு முன்னுரிமை கொடுத்து அவரின் பெயரை முதலில் போட்டு படக்குழுவினர் கௌரவப் படுத்தி இருந்தனர். அதுபோல படத்தில் நடிக்கும் பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோரின் பெயருக்குப் பின்னரே உதயநிதி ஸ்டாலினின் பெயர் இடம்பெற்றிருந்தது. இந்த போஸ்டர்கள் இணையத்தில் பரவலான கவனத்தைப் பெற்றன.

Maamannan movie crew finished first schedule shooting

ஷுட்டிங் ஸ்பாட்டில் வடிவேலு…

அறிவிப்பு வெளியான சில தினங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்தது. மாமன்னன் படத்தின் படப்பிடிப்பில் சமீபத்தில் வடிவேலு கலந்துகொண்டுள்ளார். இதையடுத்து அவருக்குப் படக்குழுவினர் மாலை அணிவித்து வரவேற்பு அளித்துள்ளனர். படக்குழுவினரோடு வடிவேலு இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவியது.

Maamannan movie crew finished first schedule shooting

மாமன்னன் அப்டேட்…

இந்நிலையில் விறுவிறுப்பாக நடந்து வந்த இந்த படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் முடிந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும் படக்குழுவினர் அதைக் கொண்டாடும் விதமாக கேக் வெட்டிய புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளது. முதல் முதலாக படத்தின் போஸ்டரில் உதயநிதி ஸ்டாலின் இருக்கும் போஸ்டரையும் பகிர, அந்த போஸ்டர் இப்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Oscar 2022 : வில் ஸ்மித் அடித்தது குறித்து நடிகை சமந்தா போட்ட வைரல் பதிவு!

தொடர்புடைய இணைப்புகள்

Maamannan movie crew finished first schedule shooting

People looking for online information on Fahadh Faasil, Keerthi Suresh, Maamannan, Mari Selvaraj, Udhayanidhi Stalin, Vadivelu will find this news story useful.