மாஸ்டர் : லோகேஷ் கனகராஜ் 'மரண மாஸ்' ட்வீட்... "அந்த நேரத்தில் 'மாஸ்டர்' திரும்ப எழுந்து வருவான்"
முகப்பு > சினிமா செய்திகள்இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் படம் மாஸ்டர். அவருக்கு வில்லனாக மக்களை செல்வன் விஜய் சேதுபதி நடிக்கிறார். மேலும் இந்த படம் ஏப்ரல் 9 இன்று ரிலீஸ் ஆவதாக இருந்தது. இந்நிலையில் கொரோனா காரணாமாக படம் ரிலீஸ் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைத்திருக்கிறது. இந்த நாள் ஒரு தளபதி ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்டமாக இருந்திருக்க வேணும், அனால் இப்படி ஆகி விட்டது என்பதும் உண்மை தான்.

தவிர்க்க முடியாத காரணம் ஆதலால் ரசிகர்கள் இதனை புரிந்து கொண்டுள்ளனர். ஆனாழும் நேற்றைய தினம் முதலே தளபதி ரசிகர்கள் பலரும் இது குறித்து வருத்தம் தெரிவித்து வந்தனர். இதனையடுத்து படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது ஒரு பதிவு இட்டுள்ளார். அதில் "வாழ்க்கை தான் முக்கியம் அதன் பிறகு தான் கொண்டாட்டம். சரியான நேரத்தில் மாஸ்டர் மீண்டும் எழுந்து வருவான். அது வரை வீட்டில் இருந்து. பத்திரமாக இருங்கள்" என்று அதிரடியாக கூறியுள்ளார்
Survival first! Celebration next!#master will rise on the right time!
stay home stay safe! pic.twitter.com/g9CeHfHQcT
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) April 9, 2020