www.garudabazaar.com

கவினின் 'Lift' படம் ஓடிடி-யில் ரிலீஸா? உண்மை என்ன? LIBRA புரொக்டஷன்ஸ் அதிரடி விளக்கம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு  பிறகு நடிகர் கவின் நடிக்கும் படம் Lift (லிப்ட்). கவின் மற்றும் அம்ரிதா இணைந்து நடிக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது முதலே இந்த படத்துக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Lbira clarifies Kavin Amirtha Lift movie not release in OTT

இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக அம்ரிதா நடித்துள்ளார். வினித் வரபிரசாத் இயக்கியுள்ள இந்த படத்தை ஏகா எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பாக ஹெப்ஸி தயாரித்துள்ளார். பிரிட்டோ மைக்கேல் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். S.யுவா ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்தின் முதல் சிங்கிள் ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது 'ஹே ப்ரோ' என்று பெயரிடப்பட்ட இப்படத்தின் 2-வது சிங்கிள் பாடலை இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டிருந்தார். இந்த பாடலை கிருத்திகா நெல்சன், அதீஃப் முஹம்மது, பென் கிங்ஸ்லி ஆகியோர் பாடியுள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தை வெளியிடும் Libra புரொடக்‌ஷன்ஸ், தமது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் “Lift திரைப்படம் தியேட்டர்களில் 100% இருக்கையின்போது தான் வெளியாகும். படம் நேரடியாக OTT-யில் வெளியாவதாக கூறப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம்.” என தெளிவுபடுத்தியுள்ளது.

மேலும் அந்த ட்விட்டர் பதிவில், “சவுண்ட் இன்ஜினியர் தபஸ் நாயக் திரைப்படத்துக்கு தேவையான ஒலி வடிவமைப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இது ஒரு சரியான தியேட்டர் மோட்டிவேஷன் திரைப்படமாக இருக்கும்” என்றும் அந்நிறுவன்ம் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே நெல்சன் திலிப்குமாரின் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் 'பீஸ்ட்' படத்தின் டைரக்‌ஷன் டீமில் பணியாற்றிய கவின், 'Lift' படத்திற்குப் பிறகு 'ஆகாஷ்வானி' எனும் வெப் சீரிஸில் நடிக்கிறார் என்கிற தகவலும் முன்னதாக வெளியாகியது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: மீண்டும் இணைகிறதா ‘எங்கேயும் எப்போதும்’ படத்தின் ‘ஹிட்’ கூட்டணி?.. ஹீரோ இவரா?

Lbira clarifies Kavin Amirtha Lift movie not release in OTT

People looking for online information on Amirtha, Ekaa Entertainment, Kavin, Libra Production, Lift will find this news story useful.