www.garudabazaar.com

நடிகர் விக்ரமின் வாழ்நாள் கனவு நனவானது! வெளியான பிரத்யேக Unseen புகைப்படங்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சியான் விக்ரம்!

Kollywood Actor Vikram Meets Legendry Singer P Susheela

தற்போது துருவ நட்சத்திரம், கோப்ரா, பொன்னியின் செல்வன் படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக 2019 ஆம் ஆண்டு கமல்ஹாசன் தயாரித்த கடாரம் கொண்டான் படத்தில் நடித்தார். இந்நிலையில் இந்திய சினிமாவின் மூத்த பின்னணிப் பாடகியான ஆந்திராவை சேர்ந்த  பி.சுசீலா அவர்களின் வீட்டிற்கு கடந்த மாதம் நடிகர் விக்ரம் சென்று சந்தித்துள்ளார். இது குறித்து பி. சுசிலா தனது முகநூலில் சில புகைப்படங்களை பகிர்ந்து கீழ்கண்டவாறு கூறியுள்ளார். 

Kollywood Actor Vikram Meets Legendry Singer P Susheela

"அக்டோபர்  மாதம் ஒரு நாள் சுஷீலாம்மா வீட்டிற்கு ஒரு போன்  வந்தது . நடிகர் விக்ரம் அவர்களின் மேனேஜர் பேசினார். விக்ரம் அம்மாவின் பெரிய விசிறி என்றும் அவர்களை சந்திக்க விரும்புவதாகவும் கூறினார். அடுத்த நாள் மாலை வரலாம் என்று அம்மா கூறினார்கள்.  அம்மாவை பார்த்த மகிழ்ச்சி ஒரு பக்கம், பயம் கலந்த மரியாதை ஒரு பக்கம்  சிறிது நேரம் கனவுலகில் இருந்தார்  என்றால் மிகையாகாது .  அம்மா அத்தனை சகஜமாக பழகுவார் என்று எதிர் பார்க்கவில்லை , அவர்களின் பாடல்கள் போலவே அவர்களின் பேச்சும் அத்தனை   இனிமையாக இருக்கிறதே என்று வியந்தார்.  அம்மாவிடம் பல பாடல்கள் பற்றி பேசினார். அம்மா சில பாடல்கள் பாட அவரும் உடன் பாடினார்.

Kollywood Actor Vikram Meets Legendry Singer P Susheela

இன்றைய முன்னணி கதாநாயகர் விக்ரம் இத்தனை பணிவாக எந்த ஒரு பந்தாவும் இல்லாமல்  அத்தனை அடக்கமாக பழகியது ஆச்சர்யபடும் வகையில் இருந்தது. மனதிற்கு சந்தோஷமாகவும் இருந்தது. பத்து நிமிடம் அம்மாவை பார்த்து விட்டு போகலாமென வந்தவர் 2 மணிநேரம் பேசிகக்கொண்டிருந்து விட்டு மனமில்லாமல் அவசர வேலையாய் கிளம்பி சென்றார். என் வாழ்க்கை கனவு நனவானது என்றும் அதற்கு அந்த ஆண்டவனுக்கு நன்றி என்றும் கூறி விட்டு சென்றார். அம்மாவுக்கு ஆட்சேபனை இல்லையென்றால் அடிக்கடி வருகிறேன் என்றும் கூறிவிட்டு சென்றார்.

நல்ல ஒரு மாலை பொழுதை எங்களுக்கு அளித்த விக்ரம் அவர்களுக்கு நன்றி. இத்தனை உயர்ந்த இடத்தில் இருக்கும் ஒரு முன்னணி நடிகர், இவ்வளவு எளிமையாக இருப்பது அபூர்வம். நன்றி விக்ரம் சார் !!" என பி. சுசிலா தனது முகநூல் பதிவில் கூறியுள்ளார்.

86 வயதாகும் புலபக சுசிலா எனும் பி. சுசிலா ஆந்திரா விஜயநகரை சார்ந்தவர், 50000 பாடல்களுக்கு மேல் பாடி கின்னஸ் சாதனை படைத்தவர். பத்ம பூஷன் விருதுடன் ஐந்து தேசிய விருதை வென்றவர். 

Kollywood Actor Vikram Meets Legendry Singer P Susheela

People looking for online information on P susheela, Vikram will find this news story useful.