Vilangu Others
www.garudabazaar.com

KING OF OPENING அஜித் வரார்! "வலிமை" பட கேரள வினியோகஸ்தர் கொடுத்த வேறமாரியான ரிலீஸ் தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கேரளா, பாலக்காடு - திருவனந்தபுரம் : நடிகர் அஜித்குமார் நடிக்கும் வலிமை படத்தின் கேரள ரிலீஸ் குறித்து வினியோகஸ்தர் புதிய தகவலை கொடுத்துள்ளார்.

KING of Opening Ajith Kumar Valimai Kerala Theatre Count

ஷங்கர் - ராம் சரண் RC15 படத்தில் இணைந்த அஞ்சலி! லேட்டஸ்ட் ஃபோட்டோவோடு வெளியிட்ட செம அப்டேட்

வலிமை படத்தில் வில்லனாக கார்த்திகேயாவும், அஜித்திற்கு நண்பியாக ஹூமா குரேஷியும் நடிக்கின்றனர். ராஜ் ஐயப்பா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். வலிமை படத்தில் முன்னணி மலையாள நடிகர்களான தினேஷ் பிரபாகர், துருவன், பேர்ல்லி மானே ஆகியோர் நடிக்கின்றனர்.

கதிர் கலை இயக்குனராக பணியாற்றுகிறார். சண்டைக்காட்சி இயக்குனராக திலிப் சுப்பராயன் பணியாற்றுகிறார். நிரவ் ஷா ISC ஒளிப்பதிவு செய்ய, விஜய் வேலுக்குட்டி எடிட்டராக பணியாற்றுகிறார். இயக்குனர் எச். வினோத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். போனி கபூருடன் இணைந்து ஜி ஸ்டூடியோஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.

KING of Opening Ajith Kumar Valimai Kerala Theatre Count

வலிமை படத்தின் கேரள தியேட்டர் ரிலீஸ் உரிமையை புஷ்பா, மாநாடு படங்களை ரிலீஸ் செய்த E4 Entertainment நிறுவனம் கைப்பற்றியுள்ளது. வலிமை படம் 2022 பிப்ரவரி 24 ஆம் தேதி ரிலீசாகும் என புதிய போஸ்டர் மூலம் தயாரிப்பாளர் போனிகபூர் சில நாட்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளிலும் வருவதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.

வலிமை படம் CBFC சென்சாரில் U/A சான்றிதழ் பெற்றுள்ளது. மேலும் இந்த படம் 178 (2:58) மணி நிமிடங்கள் ஓடும் எனவும் அறிவிக்கப்பட்டது. பெற்றோர்களின் மேற்பார்வையில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களும் இந்த படத்தை பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டது.

KING of Opening Ajith Kumar Valimai Kerala Theatre Count

வலிமை படத்தின் சவுண்ட் மிக்ஸிங் பணிகள் சென்னை ஃபோர் பிரேம்ஸ் சவுண்ட் கம்பெனியில் சில நாட்களுக்கு முன் நடந்தன. இந்த சவுண்ட் மிக்ஸிங்குக்கு தேசிய விருது வென்ற மலையாள ஆடியோகிராபர் மேடயில் ராதாகிருஷ்ணன் ராஜகிருஷ்ணன் பணிபுரிகிறார்.

KING of Opening Ajith Kumar Valimai Kerala Theatre Count

இந்நிலையில் வலிமை படத்தின் மலையாள வினியோகஸ்தர் டிவிட்டரில் அப்டேட் கொடுத்துள்ளார். அதில், "KING OF OPENING அஜித்குமாரின் வலிமை படம் ரிலிசாக 5 நாட்களே உள்ளது. வலிமை படம் 200க்கும் மேற்ப்பட்ட திரைகளில் வெளியாகிறது என்றும், முதல் ஷோ காலை 5 மணியில் இருந்து பாலக்காடு, திருவனந்தபுரத்தில் திரையிடப்படும் என்றும், மற்ற ஊர்களில் காலை 6 மணியில் இருந்து திரையிடப்படும்" என்றும் கூறப்பட்டுள்ளது.

குடி போதையில் தமிழ் சினிமா நடிகை திடீர் கைது... பரபரப்பான பின்னணி காரணம் இது தான்

தொடர்புடைய இணைப்புகள்

KING of Opening Ajith Kumar Valimai Kerala Theatre Count

People looking for online information on Ajith Kumar, அஜித்குமார், நிரவ் ஷா, வலிமை படம், Boney kapoor, H Vinoth, Valimai Kerala Theatre, Valimai Movie will find this news story useful.